திரைச்செய்திகள்

’பொல்லாதவன்’ படம் தொடங்கி தனுஷ் -வெற்றிமாறன் இருவரது நட்பும் மிகுந்த அடர்த்தியுடன் விளங்கி வருகிறது.

மற்ற இயக்குநர்களின் கதைகளில் நடித்தாலும் அந்தக் கதைகள் அனைத்தையும் வெற்றிமாறன் கேட்டு ஓகே செய்தால் மட்டுமே தனுஷ் நடிக்கிறார். இதற்கு இந்தியில் தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’ திரைப்படமும் விதிவிலக்கு அல்ல. அவர் நடிக்கும் இந்திப் படங்களுக்கான கதையையும் அவர் கேட்பதால்,பாலிவுட்டில் நடக்கும் சில முக்கிய சினிமா நிகழ்ச்சிகளுக்கு வெற்றிமாறனை அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

விஜய் ஆண்டனியால் மறக்கமுடியாத ‘2.0 பிச்சைக்காரன்’

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்திற்கு முன்னர் தனுஷுடன் இயக்குனர் வெற்றிமாறன் மீண்டும் ஐந்தாவது முறையாக இணையும் படத்தை இயக்க இருக்கிறார்.

வெங்கட் பிரபு நடித்திருக்கும் ‘லாக்-அப்’

இதுவொரு குறுகிய காலத் திட்டம். இத்திரைப்படம் ஒரு அட்டகாசமான த்ரில்லர் எனவும் முழு படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெறும் என்றும் வெற்றிமாறன் உதவி இயக்குநர் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இரண்டு மாதத்திற்குள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்கிறார்கள். இந்தப்படத்தை ஆஸ்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பதும் உறிதியாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

கோலிவுட் டோலிவுட் மல்லூவுட் சாண்டல்வுட் என தென்னிந்திய திரையுலகில் முக்கிய நாயகியாக வலம்வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.