திரைச்செய்திகள்

உலகம்முழுவதும் COVID 19 காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் நடத்தப்படவில்லை அதனால் சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாவது தடைபட்டு வந்தது.

அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் ரிப்பீட்டு செய்யப்பட்டு வந்தன. தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில் சீரியல்களின் படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன . ஜூலை 27 முதல் விஜய் டிவியின் நெடுந்தொடர்கள் புத்தம் புதிய எபிசோடுகளோடு ஒளிபரப்பாகும் என்பதை விஜய் டிவி தெரிவிக்கிறது.

ஓடிடியில் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’!

அவற்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா, ஆயுதஎழுத்து, செந்தூரப்பூவே, தேன்மொழி பி.ஏ., மலைமுதல்இரவுவரை, திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பப்படும் என விஜய்டிவி தெரிவித்துள்ளது. இதேபோல், பிற்பகல்நேரங்களின்; ஈரமானரோஜாவே, பொம்முகுட்டிஅம்மாவுக்கு, பொண்ணுக்குதங்கமனாசு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், அன்புடன்குஷி ஆகியவை திங்கள் முதல் சனிவரை மதியம் ஒளிபரப்பாகும். இதைத்தவிர, விஜய் டிவியில் மேலும் சில தொடர்கள் புதிதாக தொடங்கவுள்ளன. ஜூலை 27 முதல் பாக்யலட்சுமி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 புத்தம் புதிய தொடர்கள் அறிமுகப்படுத்துகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது