திரைச்செய்திகள்

தற்காலத் திரையிசையின் ராக்ஸ்டார் என்று புகழப்படுபவர் அனிருத் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமாவின் மிக இளவயது இசையமைப்பாளரும் அவர் தான். அவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்து விட்டது. தெலுங்கு சினிமாவில் ஜெர்சி, கேங் லீடர் என அடுத்தடுத்து இவர் இசையமைத்த இரண்டு மாஸ் படங்கள் மெஹா ஹிட். இதேபோல் தமிழில் வெளியான பேட்ட படம் சுமாரான வெற்றியே பெற்றாலும் அந்தப் படத்தின் இசை ஆல்பம் ஹிட் அடித்தது. ’தர்பார்’ மூலம் மீண்டும் ரஜினி படத்துக்கு இசையமைத்தார். ஆனால் அந்தப் படம் வசூலில் சுருண்டு துவண்டு போனாலும் அந்தப் படத்தின் இசை ஆல்பம் 10 கோடி வரை வருவாய் ஈட்டிக் கொடுத்துள்ளதாம்,

விஜயின் சிங்கப்பெண் பிக்பாஸ் கவினுடன்!

இந்நிலையில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி மாலை சென்னையில் உள்ள தனது ஸ்டுடியோவில் இருந்து விங்க் இசைச் செயலில் நிறுவனம் நடத்தில் இணைய இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார் அனிருத். அந்த நிகழ்ச்சியில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ’குயிட் பண்ணுடா’ என்ற பாடலை வாசித்து காண்பித்தார்.

விஜய் சேதுபதியை இயக்க விரும்பும் விஜய் மகன்!

அப்போது மாஸ்டர் படம் எப்படி வந்திருக்கிறது, திரையரங்க ரிலீஸ் மூலம் படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பது பற்றியும் பேசினார். “ ‘குயிட் பண்ணுடா’ பாடலின் வரிகள் காணொளியை வெளியிட்டுள்ளோம். பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. படமும் செம்மையாக வந்திருக்கிறது. இந்தச் செய்தி ரசிகர்கள் வரை சென்று அடைந்துள்ளது. நானும் ஒரு ரசிகனாக மாஸ்டர் வெளியீட்டிற்காக காத்திருக்கிறேன். எனவே படம் வெளியாகும் போது நீங்கள் அதை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். தியேட்டர் அனுபவத்திற்காக காத்திருக்கும் நான் நிரம்பிய திரையரங்குகளில் படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்” என்று விஜய் ரசிகர்களை உசுப்பேற்றியிருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது