திரைச்செய்திகள்

புதுமைப் பித்தன் பார்த்திபன் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் எண்ணத்தை திண்ணமாகச் சொல்லிவிடுவார்.

அப்படித்தா தல அஜித்தின் நடிப்புத் திறன் குறித்த அவரது அளவீடும் மதிப்பீடும் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. நீ வருவாய் என, உன்னை கொடு என்னை தருவேன் போன்ற படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள பார்த்திபன் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் நடிப்பை பார்த்து பிரமித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ரஹ்மானுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய வைரமுத்து!

இணையப் பேட்டி ஒன்றில் பார்த்திபன் பேசும்போது “ ஜோக்கர் திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு அஜித் திறமையானவர்” என பாராட்டியுள்ளார். மேலும் அத்துடன் அஜித்துடன் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பார்த்திபன், “இரண்டு படங்களில் அஜீத்துடன் நடித்து இருந்தாலும் மீண்டும் அவருடன் நடிப்பதை விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அஜித் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்திற்கு பதிலளித்துள்ள பார்த்திபன், “எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் வில்லனாக நடிக்க முடியும்.

தனுஷுக்கு முன்னுரிமை கொடுக்கும் வெற்றிமாறன்!

ஆனால் என்னைவிட சிறப்பாக வில்லனாக அஜித் நடிப்பார். அதற்காக நான் ஹீரோவாக ஆசைப்படவில்லை, அதில் அவர் சிறப்பானவர் என்று சொல்கிறேன். ஒருவரை ஹீரோவாக மாற்ற நிறைய வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. ஆனால் வில்லனாக நடிப்பதற்கு சிறந்த நடிப்புத் திறன் வேண்டும் அதனால்தான் அஜித்தான் வில்லன் ஆக முடிந்தது” என்று அட்டகாசமாக பதில் கூறியிருக்கிறார். இது தவிர எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி திரைப்படத்தில் அஜித் நடிப்பு பற்றி குறிப்பிட்டுள்ள பார்த்திபன், “ஜோக்கர் போன்ற ஹாலிவுட் படத்தில் அவர் நடித்தால் மிகச்சிறந்த நடிப்பை கொடுப்பார் அப்படி ஒரு கேரக்டரில் அஜித் நடித்தால் தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்” என்று புகழ்ந்துள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது