திரைச்செய்திகள்

நடிகர் சூர்யா நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யும் அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்துகிறார் என்றால், அவரது தம்பி கார்த்தியோ.. விவசாயிகளுக்கு உதவவும் அவர்களுக்கு கைகொடுக்கவும் உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பினை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் இந்தியஅரசு வெளியிட்டிருக்கும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு (Environmental impact Assessment- EIA 2020 நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக பாஜகாவைச் சேர்ந்தவர்களே சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உழவன் பவுண்டேஷன் மூலம் விவசாயிகளுடன் தொடர்புடைய கார்த்தி இந்த அறிக்கை வேடிக்கை பார்த்துகொண்டு இருப்பாரா. இந்திய அரசின் அறிக்கையை விமர்சித்து கார்த்தி அவரச அறிக்கை ஒன்றினை கார்த்தி வெளியிட்டு இருக்கிறார்.

அதில் ,”நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நட வளந்தரு நாடு-குறள் 739. 'முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடையநாடுகளை சிறந்த நாடுகள் என்று கூறுவர். தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல'- மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்கள் உடைய சிறந்த நாடாக, உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில் இப்போது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே, நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை. மேலும் அச்சுறுத்தல் ஆனால், தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு (Environmental impact Assessment- EIA 2020) நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

மலைகளும் ஆறுகளும் பல்வகை உயிரினங்களுமே நம் வாழ்விற்கு ஆதாரமானவை. மரங்களையும் விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் போடுவதும் இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதும் நிச்சயம் வளர்ச்சி அல்ல. கேள்விகுறியாக்கும் முயற்சி இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் முயற்சி. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது” என அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது அறிக்கையில் “ இந்த வரைவு அறிக்கையில் 'பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்' என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப்பெரிய அவநம்பிக்கையையும் அச்சத்தையும் உருவாக்குகிறது. பேசவே முடியாது நம் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான ஒரு சட்டமாக இருக்கும்?” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்நிலையில் தம்பி கார்த்தியின் அறிக்கையில் இருக்கும் நேர்மையை, நியாத்தை உணர்ந்த அண்ணன் நடிகர் சூர்யா "பேசிய வார்த்தைகளை விட பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நம் மௌனம் கலைப்போம்" என தம்பிக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். “ தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பலமொழி உள்ளது. அதேபோல இதுபோன்ற ஒரு அண்ணன் கார்த்திக்கு கிடைத்ததும் கடவுள் சித்தம் தான்.. சிவகுமார் இரண்டு சிங்கங்களைப் பெற்றுள்ளார். சினிமா புகழுடன் வீட்டில் ஜாலியாக இருக்காமல், நம்மை வாழவைக்கும் நாட்டு நாம் என்ன செய்தோம் என எண்ணும் இவர்கள் பக்கம் தமிழகம் நிச்சயமாக நிற்கும். நிற்க வேண்டும்’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது