திரைச்செய்திகள்

ஷாம் நடிப்பில் குழந்தை கடத்தலை பின்னனியாகக் கொண்டு வி.இசட் துறை இயக்கிய படம் ‘ஆறு மெழு வர்த்திகள்’. இதில் சிறுவர் சிறுமியரைக் கடத்தி விற்கும் கொடூர வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் கிலி பரப்பியவர் மலையள நடிகர் அணில் முரளி.

அந்தப் படத்துக்குப் பின்னர், முன்னணிக் கதாநாயகர்களின் படங்களில் வில்லனாக தமிழில் நடித்து வந்தார். இந்தி சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் ஜெயம் ரவிக்குப் பெயர் பெற்றுக் கொடுத்த ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தார்.

இந்த படங்கள் தவிர, நிமிர்ந்து நில், அப்பா, கொடி, தொண்டன், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் இவரது நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் பயந்துதான் போனார்கள். மலையாளம் கலந்து தனது சொந்தக் குரலில் அவர் பேசி வந்தது ரசிகர்களை இன்னும்மிரட்டியது. அத்தனை கொடூரமாக ஒவ்வொரு படத்திலும் புதிய நடிப்பைக் கொடுப்பார். மலையாளப் படங்களிலும் இவரது ஆட்சி நடந்து வந்ததால் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அவரை மதித்து வந்தனர். இந்நிலையில் உடல்நிலை சரியின்றி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனில் முரளி, அங்கே கொரோனாவுக்கான சிகிச்சை எடுத்துக்கு கொண்டு முன்னேறி வந்த நிலையில் திடீர் முச்சுத் திணறல் காரணமாக உயிர் இழந்தார். மம்முட்டி உள்ளிட்ட மலையாளத் திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது