திரைச்செய்திகள்

நடிப்புக்காக தேசிய விருதுபெற்ற கலைஞரான தனுஷ் நேற்று முன்தினம் தனது 37-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருடைய ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை மலைபோல் குவித்தனர். இந்நிலையில் தனக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அதில், “என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போய்விட்டேன்.
அனைத்து Common DP-க்கள், Mash Up-க்கள், வீடியோக்கள். மூன்று மாதங்களாக நீங்கள் செய்து வந்த செய்து வந்த Count down டிசைன்கள்‌ அனைத்தையும் முடிந்தவரை பார்த்தேன்‌, ரசித்தேன்‌, மகிழ்ந்தேன்‌. மிக்க மிக்க நன்றி.

அதையும்‌ தாண்டி நீங்கள்‌ செய்த அத்தனை நற்பணிகளையும்‌ கண்டு நெகிழ்ந்த நான்‌, உங்களால்‌ கர்வம்‌ கொள்கிறேன்‌, பெருமைப்படுகின்றேன்‌. மேலும்‌ எனக்கு தொலைப்பேசி வாயிலாகவும்‌, பத்திரிக்கை மூலமாகவும்‌, சமூக வலைத்தளங்கள்‌ வழியாகவும்‌ வாழ்த்துக்கள்‌ தெரிவித்த திரைத்துறையினர்‌, சமூக ஆர்வலர்கள்‌, அரசியல்‌ பெருமக்கள்‌, நண்பர்கள்‌ மற்றும்‌ பண்பலை, ஊடகம்‌, தொலைக்காட்சி அன்பர்களுக்கும்‌, என்‌ நலன்‌ விரும்பிகளுக்கும்‌ என்‌ நெஞ்சார்ந்த வணக்கத்தையும்‌,நன்றியையும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது