திரைச்செய்திகள்

திரையுலகப் பிரபலங்களை கொரோனா ஆட்டிவித்து வருகிறது.

350 கோடியில் தயாராகி, சீனா உட்பட உலகம் முழுவதும் 1200 ரூபாய் வசூல் செய்த பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியையும் கொரோனாவிட்டுவைக்கவில்லை.ஆனால் இது லேசான கொரோனா வைரஸ் தாக்குதல் தான். ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் ராஜமெளலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தோம். சில நாட்களில் காய்ச்சல் தானாகவே தணிந்தது, ஆனாலும் நாங்கள் சோதனை செய்யப்பட்டோம். இதன் விளைவாக லேசான கோவிட் 19 பாதிப்பு இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து டாக்டர்கள் பரிந்துரைத்தபடி நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம்” என்று பாகுபலி சூளுரை செய்து பதிவிட்டுள்ளார் எஸ்.எஸ்.ராஜமௌலி.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது