திரைச்செய்திகள்

’தல’ அஜித் மீது அவர்களது ரசிகர்கள் வைத்திருக்கும் காதலையும் அன்பையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அதற்கு கே.ஜி.எஃப் 2 படத்தின் போஸ்டரே சாட்சி. கோலார் தங்க வயலின் மறைக்கப்பட்ட வரலாற்றை கமர்ஷியல் காவியமாக்கிய படம் கே.ஜி.எஃப் முதல் பாகம். கன்னடத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யபட்டு இந்தியா முழுவதும் 280 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. தமிழ் நாட்டில் மட்டுமே 27 கோடி ஈட்டியது. அதிக அளவில் டவுண்லோட் செய்யப்பட்ட படம் எனது தமிழ் ராக்கர்ஸ் பைரசிய மாபியா ஆட்களும் வியந்து அறிவித்தனர். இப்படிப்பட்ட நிலையிதான் அதன் இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு எகிர ஆரம்பித்தது. தற்போது, கேஜிஎஃப் படக்குழுவினரால் அதன் இரண்டாம் பாகமான கேஜிஎப் 2 படத்தில் நடிக்கும் சஞ்சய் தத்தின் முதல் தோற்றம் போஸ்டர் வெளியிடப்பட்டு பெறும் வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி சூளுரை!

இந்த போஸ்டரால் கவரப்பட்ட ‘தல’ அஜித்தின் ரசிகர்களில், சஞ்சய் தத்துக்குப் பதிலாக அவரது கதாபாத்திரத்தில் அஜித் நடித்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து, சஞ்சய் தத்து வாளுடன் போஸ்டரில் இருக்கும் இடத்தில் தல அஜித்தை மாற்றி வடிவமைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பார்க்கவே வெறித்தனமாக இருக்கும் இந்த போஸ்டர் தல ரசிகர்களை கவர்ந்துவிட்டதில் வியப்பில்லை.

'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ்ஸின் முக்கியமான 12 படங்கள்!

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக இருக்கும் அஜித், இதுபோன்ற வீரம்மிக்க கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கலாம் என தல ரசிகர்களில் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். வினோத் இயக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்துக்குப் பிறகு அஜித் அவரது இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் முதல் தகவலுக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருந்த நிலையில் அந்தப் படம் இந்தியிலும் மொழிமாற்றம் ஆகி வெளியாக இருக்கும் தகவலைப் படக்குழு கசியவிட்டுள்ளது. அதன் மூலம் இந்தியிலும் அஜித் கால் பதிக்கிறார் எனக் கூறப்பட்டது. ஆனால், ஷாரூக்கானுடன் அவர் ‘அசோகா’ என்ற இந்திப் படத்தில் ஏற்கெனவே நடித்துவிட்டதை பலரும் மறுந்துவிட்டனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

நடிகர், நடிகைகளுக்கு யோகா ஆசிரியை ஆக இருந்த அனுஷ்காவை ஒரு நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உருவாக்கிய படம் கடந்த 2009-ம் ஆண்டு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.