திரைச்செய்திகள்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

ரசிகர் ஒருவர், பிரிதிவ்ராஜை வில்லனாக நடிக்க வைத்ததால் தான் காவியத் தலைவன் படம் வெற்றியடையவில்லை என நினைக்கிறீர்களா என அப்போது வசந்த பாலனிடம் கேட்டிருந்தார். அதற்கு வசந்த பாலன் அளித்த பதில்:

சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது!

இருவர் படம் ஏன் தோல்வியடைந்தது என்று மணி ரத்னம் சாரிடம் கேட்டதற்கு அவர் சொன்னார் - இரண்டு பேர், ஒருவருக்கு ஒருவர் பிடிக்காது. எனில் இருவரும் அதீத கொடூரத்தனங்களை, இவன் அவனுடைய வீட்டை அடித்து நொறுக்கினான், அவன் இவன் காரை எரிய வைத்தான், அவன் இவன் லாரியை எரிய வைத்தான் என ஓவர் ஆக்‌ஷன்களை ஒரு பார்வையாளன் எதிர்பார்க்கிறான். வலிக்காமல் குத்துவது, வலிக்காமல் பேசுவது, மிகவும் நாகரிகமான இரு நண்பர்களிடையே உள்ள போட்டி என்பது சினிமாவுக்குப் பத்தாது. சினிமாவுக்கு அதிக மசாலா தேவைப்படுகிறது. அதிகக் கொடூரம், அதிக வன்முறை என்பதைத்தான் சினிமா எதிர்பார்க்கிறது.

அந்த இடத்தில் அஜித் இருந்தால்?

நாகரிகமான இரு நண்பர்கள், இவனை அவனுக்கும் அவனை இவனுக்கும் பிடிக்காது, அதிகமாகத் திட்டிக்கொள்ள மாட்டார்கள், பெரிதாகக் கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதைக் கதையாக மாற்றுவதில் சிக்கல் உள்ளது என்றார் மணி ரத்னம். இதே சிக்கல் தான் காவியத் தலைவனிலும் இருந்தது. இரு நண்பர்களுக்கிடையே உள்ள பொறாமையை கிளாஸாகச் சொன்னதால் எடுபடவில்லை. பாகுபலியில் இருவருக்குமான பகை என்பது வன்முறையாக இருக்கும். அதுதான் மக்களிடம் சென்று சேர்கிறது என்று கூறியிருக்கிறார் வசந்த பாலன்.

இப்படி எடுத்தால் தான் ஒரு படம் வெற்றியடையும், அதற்கு மாறாக வேறுவிதத்தில் எடுத்துவிட்டால் நிச்சயம் தோல்வி தான் என்கிற கண்டிப்பான விதிமுறைகள் எதுவும் தமிழ் சினிமாவில் கிடையாது. பொய்யான நம்பிக்கைகள் பலவற்றைப் பல படங்கள் உடைத்தெறிந்துள்ளன. திருடா திருடா படத்தின் தோல்விக்கு இலக்கியத் தரமான ராசாத்தி உன்னுசுரு என்னுதில்லை பாடல் தான் காரணம் என மணி ரத்னம் சொன்னது போல இருவர் படத்தின் தோல்விக்கும் இந்தக் காரணத்தை முன்வைத்துள்ளார். ஆனால், உண்மையான காரணத்தை வெளியே சொல்ல அவர் விருப்பப்படுவதில்லை என்றுதான் தோன்றுகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.