திரைச்செய்திகள்

மணிரத்னம் தனது கனவுத் திரைப்படங்களில் ஒன்றாகவும் , லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலும் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

மறைந்த வரலாற்றுப் புதின எழுத்தாளரும் நாடறிந்த பத்திரிகையாளருமான கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலின் அடிப்படையில் உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில், சீயான் விக்ரம் ஆதித்த கரிகாலனாக நடிக்கிறார். இவர் தவிர ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், நடிகர் பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.

மகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா!

கடந்த ஆண்டு தொடங்கிய இந்தப் படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்து இயல்பு நிலை திரும்பியதும், சென்னையிலேயே மீதமுள்ள படப்பிடிப்பையும் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்காவிட்டாலும் தற்போது மற்ற சின்னச் சின்ன கதாபாத்திரங்களுக்கு நட்சத்திரத் தேர்வு நடந்து வருகிறது. பல நடிகர்கள் இப்படத்தில் புதிதாக இணைந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தெய்வ திருமகள், சைவம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா இதில் இணைத்துள்ளார்,

மணிரத்னத்தின் ரகசியத்தை வெளிப்படுத்திய வசந்த பாலன்!

அவர் இணைந்ததை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர், வந்தியத் தேவனை ஒருதலையாக காதலித்து பின் மனநலம் குன்றி இறக்கும் மணிமேகலைக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வன் கதையில் குந்தவை, நந்தினி, பூங்குழலி ஆகிய கதாபாத்திரங்களுக்கு சற்றும் குறையாத கதாபாத்திரம் என்பதால் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக சாரா நடிக்க இருப்பது உறுதியாகியிருக்கிறது. மணி ரத்னம் இயக்கத்தில் சாரா கதாநாயகியாக அறிமுகமாக அவரது அப்பா அர்ஜுனும் ஒப்புக்கொண்டுவிட்டார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.