திரைச்செய்திகள்

தற்போது செயல்பட முடியாமல் முடக்கப்பட்ட நிலையில் இருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ‘புரொடியூசர் கவுண்சில்’ என்று அழைக்கப்படுவது.

அதை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் எம்.ஜி.ஆர். விரும்பினார். அதற்காக பல தயாரிப்பாளர்களிடம் தனது எண்ணத்தை தெரிவித்தார். அப்படி அவர் விதைத்த கருத்தால் உருவானதுதான், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.

தயாரிப்பாளர்கள் வலம்புரி சோமநாதன், இராம.அரங்கணல், தேவி பிலிம்ஸ் ராஜகோபால் செட்டியார், ஏவி.எம்.முருகன், கலா கேந்திரா கோவிந்தராசன், சித்ராமஹால் கிருஷ்ணமூர்த்தி, முக்தா சீனிவாசன் ஆகிய எழு பெரும் சேர்ந்து கையெழுத்திட்டு உருவாகிய அமைப்புதான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். இந்த சங்கத்திற்கான சட்ட விதிகளை வகுத்து கொடுத்தவர் முன்னாள் சட்ட அமைச்சர் கா.பட்டாபிராமன்.

18.07.1979 அன்று துவகங்கப்பட்ட இந்த சங்கத்திற்கு முக்தா வி.சீனிவாசன் தலைவராக, முதலில் பதவி வகித்தார். அதன் பிறகு வலம்புரி சோமநாதன், சிதரமாஹல் கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.வீரப்பா, பாரதிராஜா, பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், கோவைச்செழியன், கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.முரளிதரன், ஜி.தியாகராஜன், இராம.நாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் விஷால் ஆகியோர் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர்.

கே.ஆர்.ஜி. அவர்கள் தலைவராக பதவி ஏற்ற பிறகு தயாரிப்பாளர் சங்கத்தை வலிமையுள்ள சங்கமாக மாற்றி அமைத்தார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் அதிக உறுப்பினர்களைச் சேர்த்தார். தயாரிப்பாளர்களிடத்தில் ஒற்றுமையை உருவாக்கினார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலும் படத்தின் பெயர் பதிவு செய்தால் தணிக்கை அலுவலகத்திற்குச் செல்லலாம் என்கிற நிலையைக் கொண்டு வந்தார். விநியோகஸ்தர் சங்கங்களுக்குச் சென்று தயாரிப்பாளர் நிற்பதற்குப் பதிலாக தயாரிப்பாளர் சங்கம் மூலமே பிரச்சினைக்குத் தீர்வு கண்டார். நடிகர், நடிகைகளின் பிரச்சினை குறித்து சுமுகமாகப் பேசி படப்பிடிப்பு நடத்த பல தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருந்தார்.

கட்டணம் கொடுத்துப் பாடல் ஒளிபரப்பியத்தை மாற்றி, பாடல்கள் மூலம் தயாரிப்பாளர்கள் பணம் பெறும் நிலையை உருவாக்கினார். சிறு படத் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை குறைக்கும் வகையில் முழுப் பக்க விளம்பரத்திற்குப் பதிலாக கால் பக்க விளம்பரம் கொடுக்க வழிவகுத்தார்....

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளையை தொடங்கினார். தயாரிப்பாளர்களின் பாதுகாப்புக்காக இன்சூரன்ஸ் காப்பீடு செய்து கொடுக்க வழி வகை செய்தார். திருட்டு விசிடி தயாரிப்பவர்களை ஒடுக்க அரசு மூலம் குண்டர் சட்டம் இயற்றத் திரையுலகைத் திரட்டி போராடினார். இரண்டு லட்ச மானியத் தொகையை ஐந்து லட்சமாக உயர்த்திக் கொடுக்க முயற்சி எடுத்தார். தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை சேர்த்தவர்களைப் பாராட்டிப் பெரும் விழா எடுத்துக் கௌரவித்தார். படத் தயாரிப்புச் செலவுகளைக் கட்டுப்படுத்தப் பல முயற்சிகள் மேற்கண்டார். அவரது இத்தனை சாதனைக்களுக்கும் அன்று அவருடன் பயணித்த நிர்வாக்குழு, செயற்குழு, மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் உதவியாக இருந்தார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.