திரைச்செய்திகள்

வெங்கட் பிரபுவும் சிம்புவும் சினிமா பார்ட்டிகளில் பழகி நண்பர்கள் ஆனவர்கள். இருவரும் கடந்த 2015-ம் ஆண்டிலேயே இணைந்து படம் செய்ய இருந்தனர்.

ஆனால், ‘சரோஜா’ படத்தின் தோல்வியால் அந்தக் கூட்டணி அப்போது அமையாமல் போக, இப்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வந்தபோதுதான் கொரோனாவல் படம் தற்காலிகமாக நின்றுள்ளது. அரசியலை களமாக வைத்து உருவாகும் இந்தப் படம் சிம்புவின் திரை பயணத்தில் திருப்பத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசை வேறு. சிம்புவுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க, அரசியல்வாதிகளாக பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்கள். கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன். ப்ரியாணி பொட்டலத்துக்கும் குவாட்டருக்கும் ஏங்கும் அரசியல் தொண்டர்களாக கருணாகரன், பிரேம்ஜி நடிக்க, காசுக்காக அரசியல்வாதிகளுக்கு சேவகம் செய்யும் போலீஸ் வேடதில் மனோஜ் பாரதிராஜா நடிக்கிறாராம்.

'மாஸ்டர்’ கதாநாயகிக்கு வாழ்த்து அனுப்பிய விஜய்!

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அதில், “நாங்கள் சுமார் 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தினோம். பின்னர் கொரோனா பாதிப்பு வந்து, முழு சினிமாத் துறையும் இப்போது சிக்கலில் உள்ளது. இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு நல்ல தெளிவு கிடைக்கும்போது நாங்கள் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவோம். மாநாடு படம் ஏராளமான மக்களுடன் ஒரு பெரிய அளவில் படமாக்கப்பட வேண்டும்.படத்தின் கதை அரசியல் கூட்டங்களைச் சுற்றி வருகிறது, எனவே இது உண்மையானதாக தோற்றமளிக்க படப்பிடிப்பில் அதிக மக்கள் தேவை அவசியமாகிறது.

விலைபோன நீதிபதிகளை நலம் விசாரிக்கும் சத்தியராஜ்!

தற்போதைய சூழ்நிலையில், படப்பிடிப்பில் அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, நல்ல செய்திக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மாநாடு திரைப்படத்திற்காக நாங்கள் ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளோம், அதனை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். இதுகுறித்த பிற விவரங்கள் சரியான நேரத்தில் வரும். இப்போது ஏன் அவசரம்? பாடல்கள் வெளியிட இன்னும் நிறைய நேரம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்றால், தம்பி கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

சியான் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கிவந்த இந்தப் பிரம்மாண்ட தயாரிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.