திரைச்செய்திகள்

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

தற்போது அவரது இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ‘பாகுபலி’ புகழ் பிரபாஸ். அந்தப் படத்தில், பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோன் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவருக்கு வருமான வரி செலுத்துதல் நீங்கலாக 26 கோடி ரூபாய் ஊதியமாகப் பேசி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக ட்விட்டரில் பிரபலமான பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் முகவர்கள் பதிவிட்டுள்ளனர். இன்னும் தலைப்பு வைக்கப்படாமல் ‘பிரபாஸ் 21’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப்படத்தின் மூலம் தீபிகா படுகோன் தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கிறார்.

அந்த இடத்தில் அஜித் இருந்தால்?

தீபிகாவுக்கே 26 கோடியும் வரியும் சம்பளம் என்றால் பிரபாஸின் சம்பளம்? பிரபாஸ் இந்தப் படத்தில் நடிக்க 70 கோடி சம்பளம் பெறுகிறார் என்றும் தற்போது ஒரு ரூபாய் கூட முன்தொகை பெற்றுக்கொள்ளாத அவர், படம் முடிந்து வியாபாரம் ஆனதும் தனது சம்பளத்தை ஒரே தவனையாகப் பெற்றுக்கொள்வதாக ஒப்பந்தத்ததில் தெரிவித்திருக்கிறாராம். பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸ் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாகக் கூறப்பட்டாலும் கடந்த படமான சாஹோ’வுக்கு அவர் பெற்றது 55 கோடி மட்டும்தான் என்கிறார்கள்.

பொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’

இது விஜய் தமிழில் பெரும் சம்பளத்தைவிட குறைவு என்பது குறிப்பிடத் தக்கது. பிரபாஸ் 21 படம் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் 21 படம் மூன்றாம் உலகப்போரில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் தீபிகா படுகோன் ஒரு நடனக் கலைஞராக நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது பிரபாஸ் நடித்துவரும் ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் படப்பிடிப்பு ஆந்திராவில் எந்தத் தடையும் இல்லாமல் நடந்து வருகிறது. ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.