திரைச்செய்திகள்

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி என்ற வரிசையில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் இருந்து வருகிறது. விஜயின் படங்கள் 225 கோடி முதல் 250 கோடியும் அஜித்தின் படங்கள் 175 கோடி முதல் 210 கோடி வரையும் வசூல் செய்து வந்த நிலையில் ரஜினிக்கு கடைசியாக வெற்றிப் படமாக அமைந்த ‘பேட்ட’ 165 கோடி வசூல் செய்தது.

இந்த மூன்று உச்ச நட்சத்திரங்களுக்கு அடுத்த நிலையில் நான்வது உச்சநட்சத்திரம் யார் என்பதில் பெரிய போட்டி இருந்தாலும், சிறுவர் சிறுமியர், பெண் பார்வையாளர்கள், இளைஞர்கள், முதியோர் என வயது வித்தியாசம் இல்லாமல் தன் பால் ஈர்த்துக்கொண்ட சிவகார்த்திகேயன் அந்த இடத்தை எடுத்துள்ளார் என்கிறார்கள் தமிழக பாக்ஸ் ஆபீஸ் முகவர்கள். கடந்த ஆண்டு வெளியாகி ‘சுமார் வெற்றி’ என்று கூறப்படும் சிவாகார்த்திகேயன் ‘ஹீரோ’ திரைப்படம் தமிழகத் திரையரங்குகளில் மட்டுமே 125 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்கிறார்கள். சிவகார்த்திகேயன் படங்கள் ‘பிளாக் பஸ்டர்’ என்ற நிலையில் வெற்றிபெற்றால் 150முதல் 165 கோடி வசூல் செய்வது உறுதி என்கிறார்கள். சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ 155 கோடி ரூபாய் வசூல் செய்ததை இந்த இடத்தில் ஒப்பிட்டுக் காட்டுகிறார்கள்.

பொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பாலிவுட்டின் ஆக்‌ஷன் நாயகனும் கஜோலின் கணவருமான அஜய் தேவ்கன் சிவகார்த்திகேயனிடம் நட்புடன் உரையாடியிருக்கிறார். ஏற்கெனவே ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயனின் இளமைத் துள்ளல் மிக்க நடிப்பைப் பாராட்டியிருக்கிறார். இம்முறை சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் ஒரு முக்கிய பெண் கதாபாத்திரத்துக்கு புதுமுகம் ஒருவரைத் தேடிக்கொண்டிருப்பதை அறிந்த அஜய் தேவ்கன் அதுபற்றி சிவாகார்த்திகேயனிடம் தொலைபேசி வழியாக உரையாடியதுடன் அந்தக் கதாபாத்திரம் பற்றியும் கேட்டறிந்துள்ளார். ‘அந்தக் கதாபாத்திரத்தில் எனது மகளையே அறிமுகப்படுத்துங்கள். எல்லோருக்கும் செய்வதுபோல் ஸ்கிரின் டெஸ்ட் எடுத்து பொறுத்தமாக இருந்தால் மட்டும் அறிமுகப்படுத்துங்கள்’ எனக் கேட்க, வியந்துபோய்விட்டாராம் சிவகார்த்திகேயன். ’சிவாகார்த்திகேயனும் அப்படியே செய்துவிடலாம் சார்’ என்று சொல்லியிப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த இடத்தில் அஜித் இருந்தால்?

கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது ‘டாக்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் மலையாள நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அஜய் தேவ்கனின் மகள் அறிமுகமாக இருக்கும் வேடம் இரண்டாம் கதாநாயகியா அல்லது முக்கிய கதாபாத்திரமா என்பது கொரோனா ஊரடங்கு முடிந்து திரைப்படப் படப்பிடிப்பு தொடங்கும்போது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் என்கிறார்கள் ‘டாக்டர்’ படக்குழு வட்டாரத்தில். சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், நைஸா ஆகியோர் தவிர, வினய், கலையரசன் மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். அனிரூத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ’செல்லம்மா’ என்ற பாடலை எழுதியிருக்கிறார். அந்தப் பாடலை யூடியூபில் இதுவரை 1.5 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றனர்.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.