திரைச்செய்திகள்

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களைத் தொடர்ந்து ‘நேர்கொண்ட பார்வை’யில் அஜித்தை இயக்கி இருந்தார் பத்திரிகையாளர் ஹெச்.வினோத்.

அதில் அஜித் பேசிய நிறைய வசனங்களுக்கு அவரது ரசிகர்கள் பெரிய ஆராவாரங்களைச் செய்தனர். குறிப்பாக ‘ஒரு பெண் நோ-ன்னா நோ தான் அர்த்தம்’ என்று அஜித் பேசிய வசனம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்தகைய ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை அஜித் ரசிகர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.

இதுபற்றி அஜித்துக்கு முற்றிலும் மாறுப்பட்ட அந்தப் படத்தை கொடுத்த வினோத்திடம் பேசியபோது 'சதுரங்க வேட்டை' ரிலீஸுக்கு பிறகு அஜித் சாருக்குக் கதை சொல்ல இரண்டு வருஷங்கள் விடாம முயற்சி பண்ணிகிட்டே இருந்தேன். 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்குப் பிறகு அஜித் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்காக நான் ரெடி பண்ணிவெச்சிருந்த நெகட்டிவ் ஷேட் உள்ள ஒரு கதையைச் சொன்னேன். என் கதையை பத்தி ஒண்ணும் சொல்லாம ரொம்ப கமர்ஷியலா போயிட்டு இருக்கிறதாவும், நல்ல படம் பண்ணுவதில்லைனும் மாஸ் நடிகர்கள் மேல நிறைய புகார்கள் இருக்கு. அப்படியான புகார்கள் வராத அளவுக்கு ஒரு நல்ல படம் பண்ணலாம்னு இருக்கேன். அந்தவகையில், எனக்கொரு படம் பிடிச்சிருக்கு. அதை நீங்க ரீமேக் பண்றீங்களா’னு கேட்டார். ‘என்ன படம் சார்’னு கேட்டேன். ‘பிங்க்’னு சொன்னார். ‘பிங்க்’ படத்தை நான் ஏற்கெனவே பார்த்திருந்தேன். அஜித் சாருக்கு வேற லெவல்ல ஒரு ஸ்கிரிப்ட் பண்ணுவோம். ஆனா, டக்குனு ‘பிங்க்’ல அவரைப் பொருத்திப் பார்க்கிறது என் மனநிலைக்கே சிக்கலா இருந்தது. ‘இதுக்கு ரசிகர்கள் எப்படி ஒப்புக்குவாங்க, பிசினஸ் எப்படி இருக்கும்’னு நிறைய சந்தேகங்கள் அலையடிக்குது. உடனடியா என்ன பதில் சொல்றதுனு புரியாம தயங்கி நின்னேன். ‘இந்தமாதிரி எழுதி எனக்குப் பழக்கம் இல்லை. தவிர, இப்படி யோசிக்கிற ஆளும் கிடையாது. ஸ்ரீதேவி மேடத்துக்கு கொடுத்த பிராமிஸை நிறைவேற்ற இந்தப் படம் பண்றீங்க. அந்தவகையில் இந்தப்படம் உங்களுக்கு ரொம்ப முக்கியமான படம். அதை நான் சொதப்பிடக்கூடாது. எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க. நான் யோசிச்சுச் சொல்றேன்’னு சொன்னேன்.

அந்த இடத்தில் அஜித் இருந்தால்?

‘வேணுங்கற டைம் எடுத்துக்கங்க. ஆனா, இதுதான் என் அடுத்த படம்’னு சொல்லிச் சிரிச்சார். உண்மையைச் சொல்லணும்னா, நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். அதுல இருந்து மீளவே இரண்டு நாள் ஆச்சு. ஆனா, ‘இவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ, சினிமாவில் நிறைய அனுபவம் உள்ள நடிகர். ஏன் அந்தப் படம் பண்ணணும்னு நினைக்கிறார்’னு ரொம்ப யோசிச்சு எனக்கு பதிலே கிடைக்கலை இதுக்கிடையிலே ‘தீரன்’ படத்துக்கு லொக்கேஷன் பார்க்க குஜராத்துக்குப் போகும்போது ஓடற பஸ்ல ‘பிங்க்’ படத்தைப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்துச்சு. எனக்கு இந்தி தெரியாது. ‘இது கோர்ட் ரூம் டிராமா. ஏதோ பேசுறாங்க’னு நினைச்சு பார்த்து முடிச்சேன். இப்படி எங்கேயோ, எப்போவோ பார்த்த ஒரு படம், திடீர்னு ஏதோ ஒரு பிணைப்பு மாதிரி நம் முன்னாடி வந்து நிக்குதே’ என்ற எண்ணம்தான் வந்துச்சு. பிறகு ‘பிங்க்’ படத்தை டிவிடியில் பலமுறை பார்த்தேன். படம் ரொம்ப எங்கேஜிங்கா இருந்தது. படம் இங்கே சூப்பரா வொர்க்அவுட் ஆகும். அமிதாப் சார் கேரக்டர்ல அஜித் சார் செமயா பொருந்துவார்னு தோணுச்சு. இப்படி, அவர் எடுத்த முடிவு சரியானதுதான்னு போகப்போக புரிஞ்சுது. ஆனா, இதை நம்மளால பண்ண முடியுமானு எனக்கு யோசனை.

பொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’

பிறகு நான் சாரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவைக் கூப்பிட்டு, ‘நம்ம ஊருக்குத் தேவையான விஷயங்களைச் சேர்த்துப் பண்ணினால் இது செமையா செட்டாகும். ஆனா, நான் எமோட் பண்ற ஆளு கிடையாது. எல்லாத்தையும் கொஞ்சம் இன்ஜினியரிங்கா யோசிக்கிற ஆள். என்னால படத்தைப் பண்ணமுடியுமானு டவுட்டா இருக்கு’னு சொன்னேன். ‘அஜித் சாரை மறுபடியும் சந்திப்போம்’னு சொன்னார். சந்திச்சோம். ‘சார் முதல்ல இந்தப் படத்தை நான் எப்படி புரிஞ்சிருக்கேன்னு சொல்றேன். அது சரியானு பாருங்க’னு சொல்லிட்டு, ‘பெண்களை எப்படிப் பார்க்கிறோம், எப்படிப் புரிஞ்சுட்டு இருக்கோம். எப்படிப் பார்க்கணும், எப்படிப் புரிஞ்சுக்கணும். அதுதான் இந்தப் படம் கரெக்டா சார்’ என்றேன். ‘100 சதவிகிதம் சரி’ அப்படீன்னார்.

சிவகார்த்திகேயனுடன் உரையாடிய அஜய் தேவ்கன்!

'ஓ கே இந்தப் படம் தமிழ்ச் சூழலுக்கு மாறுதானு பார்ப்போம் சார். நான் ஒரு வெர்ஷன் எழுதிப்பார்க்கிறேன்’னு சொன்னேன். என்னைப் பொருத்தவரை இந்தப் படத்தைப் பெரிய சவாலாதான் பார்த்தேன். ஆனா, ‘இந்தமாதிரி ஒரு கதையை நாம யோசிக்கப்போறது இல்லை. இப்படியொரு சான்ஸ் தானாவே வருது. நீ எதுக்கு அதை விடுற. எல்லோரும் இந்தப் படத்தைப் பண்ணணும்னு ஆசைப்படும்போது, அதுல உனக்கு ஒரு ரோல் தானாவே கிடைக்குது. பண்ணிடு’னு தோணுச்சு! பண்ணி.. அதுவும் ரிலீஸாகி இன்னிக்கும் பிரபலம் ஆவதில் மகிழ்ச்சி” என்றார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.