திரைச்செய்திகள்

இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.

அப்போது பழைய தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலைப்புலி தாணு உட்பட அவரைப் பலரும் ‘கடவுள் என்றும் அவர் தலைமையில் செயல்பட நாங்கள் தயார்’ என்றும் கூறினார்கள். ஆனால் தற்போது “பாரதிராஜாவின் செயல்பாடுகள் 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க'த்தின் செயல்பாடுகளுக்கு எதிராக இருப்பதால் அவரை 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க'த்தில் இருந்து நீக்க வேண்டும்..." என்று அந்தச் சங்கத்தைச் சேர்ந்த பல தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா 'தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' என்னும் பெயரில் புதிய சங்கத்தை துவக்கியதற்கு 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க'த்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மீண்டும் இன்று காலை அண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் தாணு, முரளி, ராதாகிருஷ்ணன், கே.ராஜன், கலைப்புலி சேகரன், கமீலா நாசர், அழகன் தமிழ்மணி, சோழா பொன்னுரங்கம், திருமலை, நளினி சுப்பையா, கே.ஜே.ஆர்., முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் புதிய சங்கத்தினரை கடுமையாகக் கண்டித்து பேசினார்கள். இதன் பின்னர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி பத்திரப் பதிவுத் துறையின் தலைவருக்கு அனைத்துத் தயாரிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பது: "தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர் பாரதிராஜாவும் மேலும் சிலரும் சேர்ந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்குவதாக அறிவித்து பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. தற்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தமிழக அரசு நியமித்துள்ள தனி அதிகாரி பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் அரசு நியமித்துள்ள தனி அதிகாரி சிறப்பாக செயல்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி பாரதிராஜா உள்பட சில தயாரிப்பாளர்கள் புதிய சங்கத்தை உருவாக்கியிருப்பது சங்க விதிகளின்படி சங்கத்துக்கு விரோதமான நடவடிக்கை. எனவே, பாரதிராஜாவையும் அவருக்குத் துணையாக உள்ளவர்களையும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாகப் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பதிவையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று.." என்று அந்த மனுவில் கோரியுள்ளனர். இதன்மூலம் பழைய தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எவ்வளவு ஊழல் நடக்கிறது என்பதும் இதனால் தற்போது படம் தயாரித்து வருபவர்கள் எவ்வளவு பணத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கப்பமாக கட்டவேண்டிய நிலை இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிவிந்துவிட்டது என்கிறார்கள் நடப்புத் தயாரிப்பாளர்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்