திரைச்செய்திகள்

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தின் 1975-ம் ஆண்டும் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர். பாலசந்தர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. அதற்குப் பிறகே பல்வேறு இயக்குநர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வந்தால் ரஜினி திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

பாரதிராஜாவை கடவுள் என்றவர்கள் இப்போது ‘கெட்-அவுட்’ சொல்லும் ஆச்சர்யம்!

இதனை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களில் மேற்கொண்டு வருகிறார்கள். ரஜினியின் 45 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன் தொடங்கி முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.முன்னணி பிரபலங்கள் பலரும் தனக்கான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்ததை முன்னிட்டு, ரஜினி தனது ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்திருக்கிறார்.

‘வலிமை’யில் வன்முறை அதிகமா?

"என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. நீங்கள்இல்லாமல்நான் இல்லை" எனப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து கமல் ரசிகர்கள ‘ எங்களது தலைவர் திரையுலகத்துக்கு வந்து 61’ ஆண்டு நிறைவு பெற்றுவிட்டன என ஏட்டிக்குப் போட்டியாக கமல் 61 போஸ்டரை வெளியிட சமூக வலைதளங்கள் அதகளம் ஆகியது. அந்த இரண்டு போஸ்டர்களை இங்கே காணுங்கள்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.