திரைச்செய்திகள்

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

அவருடைய முதல் ஒரிஜினல் ஆங்கிலப் பாடலான 'எட்ஜ்' கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதியன்று அவரது சேனலில் வெளியாகி இணையவாசிகளின் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தப் பாடல் 2021-ல் ஸ்ருதிஹாசன் வெளியிடவுள்ள ஆல்பத்தின் அங்கமாக உள்ள ஆங்கிலத் தனியிசைப் பாடல்.

'எட்ஜ்' பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இது ஸ்ருதிஹாசனின் மற்றொரு பரிமாணம். இதற்கு எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதெல்லாம் எண்ணாமல் வெளியிட்டார் ஸ்ருதிஹாசன். ஆனால் இதற்கு கிடைத்த வரவேற்பு அவரை திக்குமுக்காடச் செய்திருக்கிறது என்று தனது நண்பர்களிடமும் அப்பா கமலஹாசனிடமும் சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்கிறாராம் ஸ்ருதிஹாசன்.

விஜய்க்கு அழைப்பு விடுக்கும் மகேஷ் பாபு

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், பிரின்ஸ் மகேஷ் பாபு, ராணா, நாக சைத்தன்யா,விஷ்ணு விஷால், விக்ரம் பிரபு, தேவி ஸ்ரீ பிரசாத், தமன், நடிகர் சுஷாந்த் , ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, இயக்குநர் க்ரிஷ், ஆறுமுக குமார், நாக் அஸ்வின், கோபிசந்த், பாலாஜி மோகன், பாடகர் ஹரிசரண், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலருடைய பாராட்டால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்ருதிஹாசன். தனது முதல் பாடலுக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால், தொடர்ச்சியாக பாடல் உருவாக்கத்திலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறாராம்.

இந்தப் பாராட்டுகள் தொடர்பாக ஸ்ருதிஹாசனிடம் கேட்டால் “ உண்மையில் ஒருவித பயத்தோடு தான் வெளியிட்டேன். ஆனால், இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இது எனது குழுவினரின் கூட்டு முயற்சி. இதில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. ஏ.ஆர்.ரஹ்மான் சார், சுரேஷ் ரெய்னா சார், ஹ்ரித்திக் ரோஷன் சார், மகேஷ் பாபு சார் என பல்வேறு பிரபலங்களின் வாழ்த்து ட்வீட்களைப் பார்க்கும் போது ரொம்பவே மகிழ்ச்சியடைந்தேன். கண்டிப்பாக இந்தப் பாராட்டை தலைக்குள் ஏற்றாமல், மனதளவில் வைத்து மகிழ்ச்சியடைவேன், இந்த பாராட்டுகள் அனைத்துமே என்னை தொடர்ச்சியாக இன்னும் வேகமாக இயங்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிரபலங்கள் பாராட்டியது மட்டுமன்றி சமூக வலைதள பயனர்கள் பலரும் பாடலைக் கேட்டுவிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். என்னை வாழ்த்திய பிரபலங்கள், சமூக வலைதள பயனர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே என் சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறுகிறார்.

சவாலை ஏற்றுக்கொண்ட ஆஷிமா நார்வால்!

கரண் பாரிக் இணைந்து தயாரித்துள்ள 'எட்ஜ்' பாடலில் ஸ்ருதிஹாசன் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளார். பாடலை அவர் எழுதி, பாடியது மட்டுமன்றி பாடலை பதிவு செய்து, இயக்குநரும் எடிட்டருமான சித்தி படேல் உடன் இணைந்து வீடியோவையும் ஊரடங்கு காலத்தில் படமாக்கியுள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.