திரைச்செய்திகள்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

“கடந்த காலத்தில் ஆர்.கே.செல்வமணி நடிகர் விஷாலுடன் இனைந்து டெக்னீசியன் யூனியனை பிளவு படுத்தினார். அப்போது அவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக தனியாக ஒரு சில தயாரிப்பாளர்கள் ஆதரவு அளிக்க புதிதாக அந்த சங்கம் செயல்பட்டது. இப்போது அந்த சங்கம் எங்கே இருக்கிறது என்பதை அவரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த நிலையில் தான் நேற்றைய தினம் நடந்த இந்தியன் 2 வில் இறந்து போன உறுப்பினர்களுக்கு உதவி தொகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் அவர்கள் புதிய சங்கம் உருவாக்கப்பட்டு இருப்பது வரவேற்கிறது என்று செல்வமணி உடன் இருக்கும் போது தான் இதை அவர் கூறியுள்ளார்.

பாரதிராஜாவை கடவுள் என்றவர்கள் இப்போது ‘கெட்-அவுட்’ சொல்லும் ஆச்சர்யம்!

செல்வமணி அவர்களே நீங்கள் இதை ஆதரிக்கிறீர்களா என்று கேட்கிறேன். காரணம் நீங்கள் ஏற்கனவே இந்த பாரதிராஜாவுடன் இனைந்து படைப்பாளிகள் சங்கம் ஆரம்பிக்க நீங்கள் தான் காரணம் இப்போது கூட உங்கள் இயக்குநர்கள் சங்கத்தை இதைப்போல் பிரித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். ரன்னிங் இயக்குநர் சங்கம் என்றால் நீங்கள் எவ்வளவு தூரம் ரன்னீங் செய்வீர்கள். சென்னையில் உள்ள 25 ஆயிரம் பெப்சி தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை தருவார்களா அதற்கு நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா? சுயநலமே என் நலம் என்று வாழும் உங்கள் பதில் என்ன?

சூர்யா - பாரதிராஜா - மீரா மிதுன் : ஒரு முக்கோண மோதல்!

இந்த புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எடுக்க படும் பத்து பதினைந்து படங்களை நம்பி நாங்கள் எப்படி வாழ்வது? இந்த கொரோனா காலகட்டத்தில் உணவுக்கு கையேந்தி நிற்கும் போது இந்த தயாரிப்பாளர் தாணு தானே உதவிக்கரம் நீட்டினார்.” என்று கேட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.