திரைச்செய்திகள்

வடக்கத்திய சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தற்போது பாரதீய ஜனதா கட்சியில் அறிவிக்கப்படாத கொள்கை பரப்புச் செயலாளர் போலவும் நடந்து கொள்பவர் இன்னும் வெளிவராத ‘தலைவி’ தமிழ் மற்றும் பலமொழிப் படங்களின் நாயகியான கங்கனா ரனாவத்.

அவர் நடிப்பதால், ‘படத்தில் பணியாற்றுவதிலிருந்து வெளியேறினேன்’ என இந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளரும் தமிழ்நாட்டின் முக்கிய ஆளுமைகளில் ஒருவருமாகிய பி.சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ திரைப்படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். இவர் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இவர் ஹிந்தியில் முன்னணி நாயகியாக நடித்து வசூல் ஹீரோயினாக இருந்து வருகிறார். இதனிடையே அண்மையில் நடிகர் சுஷாந்தின் மறைவுக்கு பிறகு, இவர் தொடர்ந்து பல்வேறு அதிரடிக் கருத்துக்களை முன் வைத்து பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில், “கங்கனா ரனாவத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதால், ஒரு படத்தை நான் தவிர்க்க வேண்டிய நிலை வந்தது. எனக்கு அது அசௌகர்யமாக இருந்தது. நான் இதை தயாரிப்பாளரின் தரப்பில் சொன்ன போது, அவர்களும் புரிந்து கொண்டார்கள். சில சமயங்களில், நம் மனதில் என்ன தோன்றுகிறதோ அதுவே சரி” என அவர் பதிவிட்டுள்ளார். இது கோலிவுட்டில் தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்றால், தம்பி கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

சியான் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கிவந்த இந்தப் பிரம்மாண்ட தயாரிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.