திரைச்செய்திகள்

மும்பை மாநகரைக் குறித்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்து சிவசேனா கட்சியினரின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்ட கங்கனாவை மும்பைக்கு வரவேண்டாம் என மாகாரஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சாடினார்.

இதையடுத்து ‘தாம் மும்பை வருவதாகவும் தைரியம் இருந்தால் தடுத்துப் பாருங்கள்’ என்றும் கங்கனா சவால் விடுத்தார். அதைத் தொடர்ந்து மும்பை வரும் கங்கனாவுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கங்கனா மும்பை வந்திறங்கிய போது விமான நிலையம் மக்கள் கூட்டத்தால் அலைமோதியது. கங்கனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பும், ஆதரவு தெரிவித்து ஒரு தரப்பினரும் போராட்டம் செய்தனர்.

அக்டோபரில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4! : அதிகார பூர்வ அறிவிப்பு!

மும்பையில் தனக்குப் பாதுகாப்பில்லை என்றும், மும்பை காவல்துறையை விட, தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த காவல்துறையின் பாதுகாப்பை மிகவும் நம்புவதாகவும் கங்கனா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஜியின் ஜோடியாக பாட்ஷா படத்தில் நடித்தவரும் ஜோதிகாவின் ஒன்றுவிட்ட சகோதரியுமான நடிகை நக்மா கங்கனா மீது பெரும் பாய்ச்சலாகப் பாய்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனியிசைக்காக ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் - தனுஷ்!

அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்: ‘கங்கனா மகாராஷ்டிரா, மும்பையின் பெயரைக் கெடுத்து வருகிறார். உலகளவில் மும்பையின் பெயரைக் கெடுப்பதில் முக்கிய நபராக இருக்கிறார். ஒட்டுமொத்த பாலிவுட்டுக்கும் அவப்பெயரைக் உருவாக்கியுள்ளார். முதலில் வாரிசு அரசியல் என்று ஆரம்பித்தார். பின் பாலிவுட்டுக்குள்ளே இருப்பவர்கள் வெளியே இருப்பவர்களுக்கு எதிரானவர்கள் என்று சொன்னார். இதன்பின் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றார். இதுபோன்ற பேத்தல்களைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது’என அவர் அதிரடி கிளப்பியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றிவரும் கங்கனா, நக்மாவுக்கு நாக் அவுட் கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்!

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்