திரைச்செய்திகள்

‘சிந்து சமவெளி’ படத்தில் அறிமுகமாகி ‘தாராள பிரபு’ வரை தொடர்ந்து தோல்விப் படங்களில் நடித்து வருபவர் ஹரிஷ் கல்யாண்.

அவருக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்கு பிறகும் , அவர் நடித்த பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', தாராள பிரபு போன்ற படங்கள் வெற்றிபெறவில்லை. வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தபோதும் தோல்விகளையே சந்தித்து வந்திருக்கும் ஹரிஷ் கல்யாண் எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக பிச்சைக்காரன் படத்தின் மூலம் தனது இருப்பை நிலைநாட்டிய இயக்குனர் சசியின் இயக்கத்தில் நடித்தால் வெற்றியைச் சாத்தியமாக்கிவிடலாம் என அவருடன் தனது கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளார்.

ரோஜாக்கூட்டம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் சசி கடைசியாக ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் சசியின் அபாரமான திரைக்கதை திறமை மீது நம்பிக்கை வைத்து அவருடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ஹரீஷ் கல்யாண்: ‘உங்களது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். படப்பிடிப்புக்கான நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’என்று பதிவிட்டுள்ளார்.

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்