திரைச்செய்திகள்

தமிழ் சினிமாவில் அரசியல் காரணமாகவும் சம்பளம் காரமாகவும் நடிகர் வடிவேலுவைப் படங்களில் ஒப்பந்தம் தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள்.

இதனால், அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் பாதியுடன் கைவிடப்பட்டன. இந்நிலையில் , கமலின் தலைவன் இருக்கிறான் படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் அதில் வடிவேலுவை நடிக்க வைப்பதாக கமல் உறுதியளித்தார். ஆனால், அந்தப் படம் தொடங்க தாமதமாகிவருகிறது. இதற்கிடையில் படங்களில் நடிக்காவிட்டாலும் அவர் இதற்குமுன் நடித்த கதாபாத்திரங்களைக் வைத்து மக்கள் விதவிதமான மீம்களில் அவரை வாழ வைத்து வருகின்றனர். அன்றாடம் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளையும் மீம்கள் மூலமாக திறம்பட தயாரித்து கொடுக்கின்றனர் நமது மீம் கிரியேட்டர்கள். தமிழில் ஒரு பாடல் வெற்றி பெற்றுவிட்டால் அந்த பாடலில் வடிவேலுவை பொருத்தி ரசிகர்கள் காட்டும் எடிட்டிங் வித்தை பலரையும் தனது கவலை மறந்து சிரிக்க வைத்து விடுகிறது. இதனால், வடிவேலுவின் இடம் மக்கள் மனதில் அப்படியே இருக்கிறது. இதற்கிடையில். தமிழ் சினிமாவின் பொக்கிஷமாகவும் நகைச்சுவை அரசனாகவும் விளங்கிவரும் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது அறுபதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவரை சமூக ஊடகங்கள் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அதற்கான காரணம் அவரது தனித்துவமான நகைச்சுவை மட்டுமல்ல; இங்கு அனைத்து விஷயங்களுக்கும் வடிவேலு தான் டெம்பிளேட் என்று ஆகிவிட்டது. தமிழர்களின் எல்லா உணர்வுகளுக்குமான முகபாவனைகளை வாரி கொடுத்துவிட்டார் வடிவேலு. அனைத்து கடினமான தடங்கல்களையும் கடந்து வந்த வடிவேலு, போட்டோ பிரேம் போடும் கடையில் தினக்கூலியாக வேலை செய்துவந்தவர். 1988-ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்கும் கனவை வளர்த்துக் கொண்டார். 1991-ஆம் ஆண்டு வெளிவந்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலமாக வடிவேலு ஒரு நகைச்சுவை நடிகனாக ராஜ்கிரண் அடையாளப் படுத்தி அறிமுகப்படுத்தினார்.

அதன்பின்னர் மக்களின் மனதை நாடிபிடித்துப்பார்க்கும் மக்களின் கலைஞனான தன்னை உருவாக்கப்படுத்திக் கொண்டார்.குறிப்பாக, தேவர்மகன், சங்கமம், வின்னர், ஃபிரென்ஸ், போக்கிரி உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் மட்டுமின்றி உருக்கமான காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை சிரிக்கவும் கலங்கவும் செய்யும் மாயத்தை புரிந்தார். அவர் ஏற்ற நகைச்சுவை வேடங்களில், நேசமணி, செட்டப் செல்லப்பா, நாய் சேகர், தீப்பொறி திருமுகம், கைப்புள்ள என நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள் இன்றைக்கும் மக்கள் மத்தியில் நடமாடிக்கொண்டிருப்பதால்தான் வடிவேலுவும் வாழும் கலைஞராக இருக்கிறார். விரைவில் அவர் வெள்ளித் திரையில் விட்ட இடத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்குவார் என்பதுமட்டும் நிச்சயம்.

4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்