திரைச்செய்திகள்

‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அசோக் செல்வன் நடிக்கும் புதிய குடும்ப, காமெடி, டிராமா படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கெனன்யா பிலிம்ஸ் ஜே செல்வகுமார் தயாரிக்கும் இந்தப்படத்தை அறிமுகப் பெண் இயக்குநரான ஸ்வாதினி எழுதி இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக நிஹாரிகா கோனிடேலா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோரோனா ஊரடங்கில் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், இனி படங்களில் தொடர்ந்து நடிக்கமாட்டேன் என்று வாங்கிய அட்வான்ஸை திரும்பக் கொடுத்துவிட்டாராம்.

மாநாடு படத்துக்காக கேரளா சென்ற சிம்பு!

இதனால் அதிர்ஷ்டம் அடித்திருப்பது கௌதம் மேனன் ‘என நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகப்படுத்திய மேகா ஆகாஷுக்கு. தற்போது நிஹாரிகா பதிலாக இப்படத்தில் நாயகியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் மேகா ஆகாஷின் வரவு மேலும் அர்த்தம் கூட்டியிருப்பதாக தயாரிப்பாளரும் இயக்குநரும் கூறியிருக்கிறார்கள். குறிப்பாக இயக்குநர் ஸ்வாதினி கூறும்போது “தேவதையின் சிரிப்பு, க்யூட்டான முகம், அற்புத நடிப்பு என அனைத்தும் ஒருங்கே பெற்றிருக்கும் நடிகை மேகா ஆகாஷ், சினிமாவில் அறிமுகமான குறைந்த காலத்தில், மிகப்பெரும் வரவேற்பு பெற்று, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா!

தமிழின் மிக முக்கிய ஆளுமைகளுடன் இணைந்து நடித்திருக்கும் மேகா ஆகாஷ் இளமை பொங்கும் திறமையுடன் தரமான படங்களை தந்து வரும் அசோக் செல்வனின் அடுத்த காமெடி, டிராமா படத்தில் நாயகியாக இணைந்து நடிக்கவிருக்கிறார்.” என்று கூறியிருகிறார். இயக்குநர் சுசீந்தரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குநர் ஸ்வாதினி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்