திரைச்செய்திகள்

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை.

ஹைதபாத்தில் ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாக உருவாகிக் கொண்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த வாரம் முதல் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில்அஜித் இல்லாத காட்சிகளை அக்டோபர் 5-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறார்கள். இதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறதாம். அஜித் நடிக்க வேண்டிய எஞ்சிய காட்சிகள் அனைத்தையும் நவம்பர் மாதம் முதல்வாரம் தொடங்கி நவம்பர் 20 தேதிகளுக்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

கௌதம் மேனன் கதாநாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

வலிமை படத்திலும் யுவனும் வினோத்தும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என அட்டகாசமான பிஜிஎம்களை அஜித்துக்காகக் கொடுத்தவர் யுவன். அஜித் - யுவன் கூட்டணி மீண்டும் வலிமையில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைப் ஏற்படுத்தியுள்ளது.

அலையோடு விளையாடும் பிகில் காயத்ரி!

வலிமை படத்தின் மேலதிக தகவல்களுக்காக காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு வலிமை படப்பிடிப்பு தொடங்குகிறது எனும் செய்தி அதிக உற்சாகத்தைக் கொடுக்கும் என்பது ஐயமில்லை.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.