திரைச்செய்திகள்

ஷங்கர் இயக்கத்தில் சிட்டி 2.0 ரோபோவாக நடித்தார் ரஜினி. அதில் பறவைகளின் நேசராக,

பின்னர் கார்ப்பரேட் உலகத்தின் லாப வெறியால் கொல்லப்பட்ட பறவைகளின் ஆவிகளுடைய சக்திகள் அனைத்தையும் பெற்ற ஆவி வில்லனாக நடித்து இந்தியத் திரையுலகை அதிரவைத்தார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். அவர் நடிக்கும் இந்திப் படங்களைத் தமிழர்களும் பார்த்து கொண்டாடி வருகிறார்கள். அவர் கோரோனா காலத்தில் தனது சேமிப்பிலிருந்து 25 கோடி ரூபாயை நன்கொடையாகக் கொட்டிக் கொடுத்திருக்கிறார். இந்தியப் பிரதமர் மோடி. சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தொடர்ந்து டிஸ்கவரி சேனலினின் புகழ்பெற்ற தி மேன் வர்ஸஸ் வைல் நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் கலந்துகொண்டு அசத்தினார்.

படப்பிடிப்புக்கு தயாராகும் அஜித்!

கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் உள்ள புலிகள் சரணாலயத்தில் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்தது. இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும்முன், காலா பட நடிகை ஹூமா குரேஷி, அக்‌ஷய்குமார், பியர் கிரில்ஸ் ஆகியோர் சமூகவலைதளம் ஒன்றின் நேரலையில் ரசிகர்களோடு உரையாடினார்கள். அப்போது நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின்போது யானையின் காய்ந்த சாணத்த்தையே டீதூள் போல பயன்படுத்தி கிரில்ஸ் போட்ட தேநீரை கிரில்ஸ் , அக்‌ஷய் குமார் இருவரும் சுவைத்துக் குடித்தது பற்றி ஹூமா குரேஷி கேள்வி எழுப்பினார்.

கங்கனா மீது பாயும் பாட்ஷா கதாநாயகி!

அதற்கு பதிலளித்த அக்‌ஷய் குமார், “எனக்கு அதில் பிரச்சனை இல்லை. உற்சாகமாக தான் அந்தத் தேநீரைக் குடித்தேன். நான் தினமும் ஆயுர்வேத மருத்துவ காரணங்களுக்காக பசுவின் சிறுநீரை சில காலமாக ஒரு குறிப்பிட்ட அளவு குடித்து வருகிறேன். அப்படியிருக்க யானையின் சாணப்போடியிலிருந்து போடப்பட்ட டீ குடிப்பது ஒன்றும் சவாலான விஷயம் இல்லை” என்று அதிரடியாகக் கூற ‘ஓஓஒ...’ வியப்பு குறியால் நிறைத்தனர் ரசிகர்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.