திரைச்செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் அண்ணாத்த.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பாகவே இத்திரைப்படத்தின் 50 சதவிகித படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டன. இன்னும் 50 சதவிகித படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ள நிலையில். கேளம்பாக்கம் பண்ணைவீடு, போயஸ் கார்டன் இல்லம் என மாறி மாறி தங்கிவரும் ரஜினியை சந்தித்து முழுமையான பாதுகாப்புடன் நடிக்க வாருங்கள் என அழைத்துள்ளார் இயக்குநர். அதற்கு ரஜினி ‘இந்தியாவில் கொரோனா இல்லை என்று தெரிந்தால் மட்டுமே நான் சூட்டிங்ஸ்பாட்டுக்கு வருவேன். இதை தயாரிப்பாளரிடமும் நீங்களே கூறிவிடுங்கள்” எனச் சொல்லிவிட்டாராம். அதிர்ந்துப் போன சிவா ரஜினி இல்லாத காட்சிகளை படம்பிடிக்க திட்டமிட்டு வருகிறார்.

இதற்கிடையில் அண்ணாத்த படத்தின் வில்லன் யார் என பலவிதமான யூகங்கள் சொல்லப்பட்டு வந்தன. அதற்கு தற்போது ஒரு விடை கிடைத்துள்ளது. முதலில் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஜாக்கி ஷராஃப் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக படக்குழு புதிய தகவலை கசிய விடுகிறது. இதற்கு முன்னர் அனிமேஷன் படமாக உருவாக்கிய கோச்சடையானில் ஜாக்கி ஷெராப் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா என நட்சத்திரப் பட்டாளமே இத்திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இப்போதைக்கு கோரோனா பெருந்தொற்று முடியாது என்பதால். அண்ணாத்த படத்தை 2021-ல் கூட எதிர்பார்க்க முடியாது என்பது தெரியவந்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.