திரைச்செய்திகள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

தினமும் புதுப்புது இசைக் கோர்ப்புகள், பாடல்கள் என யூடியூப் தளத்தில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. ஏனென்றால், மக்களின் மனநிலையை அறிந்து எப்படிக் கொடுத்தால் ஈர்க்கலாம் என்பதை தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி ஒரு ஹாலிவுட் பாடல் உருவாகி, மக்களை ஈர்த்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் தயாரித்துள்ள இந்த ஹாலிவுட் ஆல்பத்தின் பெயர் 'கோல்ட் நைட்ஸ்'. இந்த ஆல்பத்திலிருந்து 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது. இதனை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இருவரும் வெளியிட்டார்கள்.
துள்ளலான இசை, I Need to Know என்று ஈர்க்கும் வரிகள் என சமூக வலைதளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. யூடியூப் ட்ரெண்ட்டிங்கிலும் உடனடியாக இடம்பிடித்தது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அசுரன், சூரரைப் போற்று என இசையுலகில் கொடிகட்டிப் பறக்கும் ஜி.விக்கு இந்த ஹாலிவுட் ஆல்பம் என்பது அவருக்கு ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.

ஏ.ஆர்.ரஹ்மான், அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் தாணு, சூர்யா, தனுஷ், ராதிகா சரத்குமார், இயக்குநர் கார்த்திக் நரேன், ரைசா வில்சன், அலிசா அப்துல்லா உள்ளிட்ட பலரும் இந்தப் பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து ஜி.வி.யின் திரையுலக நண்பர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என வாட்ஸ்-அப் வாழ்த்தால் நெகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும், சக இசையமைப்பாளராக யுவன் மற்றும் இமான் ஆகியோரும் வாழ்த்தியிருப்பது கூடுதல் சிறப்பு.
'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஹை அண்ட் ட்ரை, ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார்.

ஹாலிவுட்டில் எடுத்து வைத்துள்ள முதல் அடியே ஜி.வி.பிரகாஷுக்கு வெற்றியடைந்துள்ளது. அடுத்து எடுத்து வைக்கவுள்ள அனைத்து அடிகளுமே வெற்றியடைய வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார். விரைவில் அடுத்த ஹாலிவுட் பாடல் குறித்த அறிவிப்பு வரும். அது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று தன் மகள் அன்வியுடன் இணைந்து கண் சிமிட்டி சிரிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்