திரைச்செய்திகள்

அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்றால், தம்பி கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

கடந்த இரண்டு வருடங்களாக விவசாயிகளுக்காக பல உதவிகளை செய்தும் அவர்களுக்காக குரல்கொடுத்தும் வரும் கார்த்தி, விவசாய விளைநிலங்களுக்கு எதிராக மத்திய அரசால் கொண்டுவரப்படும் சுற்றுச்சுழல் வரைவின் ஆப்பத்தை மிகத் துணிச்சலாகச் சாடினார்.

விஜய் – வெற்றிமாறன் கூட்டணி படம் எப்போது?

தற்போது கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் அமைப்பு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் என்ற பகுதியில் சூரவள்ளி கால்வாயை தூர் வாறிச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கிட்டத்தட்ட பதிமூன்று கிலோ மீட்டர் நீளமான இந்த கால்வாய் முழுவதும் செடிகொடிகளும், புதர்களும் மண்டியிருந்த இந்த கால்வாயை சுத்தப்படுத்த ரூபாய் 4 லட்சம் சொந்தப் பணத்தை உழவன் பவுண்டேஷன் வழியாக வழங்கியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்துகள்!

கடந்த ஒருமாத காலமாக இந்த கால்வாயை தூர்வாறி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்த பணி இன்னும் சில தினங்களை முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் கார்த்தி மேனேஜர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கால்வாயின் மூலம் ராதாபுரம் பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் என்பதுடன், அந்த பகுதியில் உள்ள 10 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்