திரைச்செய்திகள்

விஷாலுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் தனது அடுத்த படமாக பிசாசு 2 குறித்த அறிவிப்பினை இயக்குநர் மிஷ்கின் நேற்றிரவு இன்று அதிகாலை இந்தியநேரம் நள்ளிரவு 12 மணிக்கு அறிவித்துள்ளார்.

இதைப் படத்தயாரிப்பாளர்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டி அறிவித்துள்ளார். மிஷ்கினின் முதல் திரைப்படம் சித்திரம் பேசுதடி இதில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியானது அதன்பின் கடந்த 14 வருடங்களில் அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா, துப்பறிவாளன், சைக்கோ என தேர்ந்த குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தபோதிலும் வசூல் ரீதியாக தோல்விப் படமே!

கணவரைப் பாராட்டும் தீபிகா படுகோன்!

ஆனால், துப்பறிவாளர் வெற்றிப்படமாக அமைந்தது. எனவே மிஷ்கின் - விஷால் கூட்டணி மீண்டும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் களமிறங்கியது. ஆனால், லண்டனின் நடந்த முதல்கட்டப் படப்பிடிப்புக்குப் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மிஷ்கின் அதிக செலவை இழுத்து விட்டதுடன் சம்பளமாக தனக்கு 5 கோடி வேண்டும் எனக் கேட்டாதால் பிரச்சனை வெடித்தது. இதன்காரணமாக பொதுவெளியில் இருவரும் மாறி மாறி வசவு வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். விஷால் நாகரீகம் காட்டினாலும் மிஷ்கின் கொச்சை வார்த்தைகளால் திரைப்பட விழாக்களில் பேசினார்.

‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா!

இதன் காரணமாக திரைப்படத்திலிருந்து மிஷ்கின் விலகிவிட்டார். இந்நிலையில் அவரது பிறந்த நாளான நேற்று பிசாசு 2 படத்தின் அறிவிப்பினை 12 மணிக்கு அறிவித்திருக்கிறார். பிசாசு முதல் பாகத்தில் நாகா, பிரயாகா, ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா, சைக்கோ படத்தின் வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். சமீபத்தில் ஆண்ட்ரியா பிசாசு போல போட்டக்களை பகிர்ந்தது இந்தப் படத்துக்காகவும் இருக்கலாம் என நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள். இதுவொருபுறம் இருக்க, இளையராஜாவின் வேண்டுகோளை ஏற்று அவரது மூத்தமகன் கார்த்திக் ராஜாவை இப்படத்திற்கு இசையமைப்பாளராக மிஷ்கின் ஒப்பந்தம் செய்திருப்பதாக மிஷ்கின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்