திரைச்செய்திகள்

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 முதல் படத்தைக் காணலாம். இந்நிலையில் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாகப் பார்ப்பதற்கான கட்டணத்தையும் அறிவித்திருக்கிறார்கள். அதாவது இந்தியாவில் ரூபாய். 199 செலுத்தினால்தான் க/பெ. ரணசிங்கம் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்க முடியும் இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இந்த விலை நிர்ணயம் பற்றி சர்ச்சைக்குரிய ஆனால் வெளிப்படையான கருத்தை கூறியிருக்கிறார். அதாவது: “ ஓடிடியில் எந்தப் படத்தையும் நேரடியாகப் பார்க்க ரூ. 199 வசூலிப்பது மிக அதிகமானது. சந்தா கட்டியதன் மூலம் இலவசமாகப் படம் பார்க்கவே நம் மக்கள் தயாராகியுள்ளார்கள். கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால் தவிர்க்க முடியாத, சுவாரசியமான படத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்துவார்கள். இந்தப் புதிய கட்டண முறை எப்படி வரவேற்பைப் பெறுகிறது என்று பொருந்திருந்து பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா!

ஆனால் திரையரங்கில் நான்கு பேர் படம் பார்ப்பதற்கான டிக்கெட் கட்டணம், பார்க்கிங், நொறுக்குத் தீணி என எல்லாவற்றுக்கும் சேர்த்து ரூ. 2000 செலவாகும். எனவே இந்தக் கட்டணம் சரிதான் என்று தனஞ்ஜெயன் படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். அதற்கு மீண்டும் பதிலளித்து தனஞ்ஜெயன் கூறியதாவது: “புதிய படங்களை இலவசமாகப் பார்த்து பழகிய மக்கள், துரதிர்ஷ்டவசமாக இந்தக் கோணத்தில் பார்க்க மாட்டார்கள்.

தினமும் கோமியம் குடிக்கிறேன்! அக்‌ஷய்குமார் அதிரடி

அக்டோபரில் இதன் முடிவு தெரியும்” என்று பதிவிட்டுள்ளார். உண்மையில் இந்த சர்ச்சையின் பின்னால் என்ன நடக்கிறது என்று யோசித்தபோது முதலில் அமேசான் நிறுவத்தில் இந்தப் படம் விற்கச் சென்றபோது படத்தை வாங்கும்முன் பார்த்து தேர்வு செய்யும் குழுவினர் இந்தப் படம் மக்கள் மத்தியில் போனி ஆகாது என்று கூறி அமேசானுக்கு பரிந்துரைக்க மறுத்துவிட்டது தற்போது தெரியவந்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்