திரைச்செய்திகள்

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

இந்தியை ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் என இரண்டு பிரிவினருக்குமே பஞ்சமில்லாத தமிழகத்தில், சமீபத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் ‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக் அச்சிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்து தங்கள் இந்தி எதிர்ப்பைக் காட்டினர். அதற்கு மாற்றாக காயத்ரி ரகுராம் , 'தமிழ் எங்கள் வேலன் இந்தி எங்கள் தோழன்’என்னும் வாசகத்தோடு இந்தி மொழிக்கு தீவிரமான ஆதரவு திரட்டி வருகிறார்.

விஜய்சேதுபதி படம் போனியாகாது!

“வெளிநாட்டில் மேடையேறி பேசும்போதெல்லாம் மோடி திருக்குறளை வைத்து பேசுவார் எனவே மோடி தமிழ் வளர்ப்பவர் என்கிறார் - நடிகை காயத்ரி ரகுராம். இந்தி மொழி கற்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக தமிழ் எங்கள் வேலன் இந்தி நம்ம தோழன் எனும் வாசகம் பொருந்திய டீ-சர்ட்டை வெளியிட்டு நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை காயத்ரி ரகு ராம். மேலும் பாரத பிரதமர் மோடி தமிழுக்கு எதிரானவர் அல்ல வெளிநாடு செல்லும் போதெல்லாம் தமிழ் திருக்குறள் சொல்லியே பேச ஆரம்பிப்பார். அதனால் அவர் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் இங்கே உள்ள சில அரசியல் தலைவர்கள் திருக்குறள் தெரியாமலும் தமிழும் தெரியாமலும் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று சாடியுள்ளார்.

கோலிவுட்டில் வெடிக்காத 2020 தீபாவளி!

பாரதப் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.இதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் கிருஷ்ணா நகர் 15 வது தெருவில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் சென்னை மேற்கு மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் AR கங்காதரன் தலைமையில், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சென்னை சிவா முன்னிலையில் பாரதிய ஜனதாவின் கலை மற்றும் கலாச்சார மாநிலத் தலைவியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு 300 ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலைகளை வழங்கினார். மேலும் 'தமிழ் எங்கள் வேலன் ஹிந்தி எங்கள் தோழன்' என்னும் வாசகம் பொருந்திய டி-ஷர்ட்கள், நோட்டு புத்தகம் பேனா உட்பட்ட பொருட்களையும் 200 மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ரஜினியின் அறிக்கையை ஊன்றிப் படித்தால் ஒரு விசயம் தெளிவாகிறது - அவர் அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை, கட்சியை நிச்சயம் துவங்குவேன், ஆனால் இந்த தேர்தலுக்குள் அது நடக்காது என்கிறார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்