திரைச்செய்திகள்

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

துருவின் இரண்டாவது படத்தை தொடங்கும்முன் கோரோனா ஊரடங்கு வந்துவிட்டது. தற்போது அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துவிட்டதால் மகனின் இரண்டாவது படத்தில் தானும் நடிப்பது என விக்ரம் முடிவெடுத்துவிட்டார். இதற்கிட ரசிகர்கள் அவரது துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன், கோப்ரா என வரிசையாக அவரது திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கதாசிரியராக மாறிய மோகன்லால்!

கோவிட் பிரச்சினைகள் காரணமாகவும், பொருளாதார பிரச்சினைகள் காரணமாகவும் அவருடைய திரைப்படங்கள் தேங்கி உள்ள நிலையில் புதிதாக சீயான் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் இணைந்து நடிக்கும் படத்தைக் கொடைக்காணலில் படப்பிடிப்பு தொடங்குகிறார்கள்.

வாடகை கொடுக்கமுடியாமல் கஷ்டப்படுகிறேன்! : மிஷ்கின் பேட்டி

சீயான் 60 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்தப் படப்பிடிபுக்காக அப்பா- மகன் இருவரும் கொடைக்காணல் செல்ல தயாராகிவருகிறார்கள். ஹோட்டலில் தங்காமல், சியான் விக்ரம் பள்ளிக் கல்வி பயின்ற மான்போர்ட் பள்ளியை நடத்திவரும் கிறிஸ்து அரசர் தேவாலயத்துக்குச் சொந்தமான ஆசிரியர் குடியிருப்பில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். தான் படித்த பள்ளிக்கு சியான் விக்ரம் லேப் வசதிகளை 50 லட்சம் செலவில் விரிவுபடுத்திக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்