திரைச்செய்திகள்

தமிழ் மற்றும் தேலுங்குப் படவுலகில் கடந்த 10 வருடத்துக்கும் மேலாக கதாநாயகியாக நடித்துவரும் சமந்தா தற்போது கதாநாயகியை மட்டுமே மையப்படுத்திவரும் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

கடைசியாக அவரது நடிப்பில் வெளியான தமிழ்ப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. அந்தப் படத்துக்கு தெலுங்கில் அவர் நடித்த ‘பேபி’ படத்தில் உடலால் இளமையாகவும் உள்ளத்தால் கிழவியாகவும் வாழும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். பேபி படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தனது முதல் அடியை வைத்துவிட்டார் என ஊடகங்கள் எழுதின. ஆனால், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டபின் சமந்தா, தமிழ்ப் படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. தனது புகுந்த வீட்டில் மாமனார் - மாமியார் என குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசிப்பதால் தெலுங்குப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

மகனுடன் கொடைக்காணல் செல்லும் விக்ரம்

சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சமந்தா, சமூக சேவையிலும் பெயர் போனவர். கோரோனா ஊரடங்கில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்த சமந்தா, தோட்ட வேலைகள் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார். குறிப்பாக, காய்கறிகளை வீட்டில் விளையவைத்து, அதை சமையலுக்குப் பயன்படுத்தினார். மேலும், பிரபல தெலுங்கு நாயகன் ராம் சரணின் மனைவி உபாசனாவின் காணொளி சேனலுக்காக சிவப்பரிசியில் தக்காளி சாதம் செய்து காண்பித்தார். இதுவொருபுறம் இருக்க, நவீன ஆடைகள் வடிவமைப்பில் சமந்தாவுக்கு அதிக ஆர்வம். தன்னுடைய கலைத்திறமையை வெளிப்படுத்த தருணம் பார்த்தவர், தற்போது ‘சாக்கி’ என்ற பெண்களுக்கான ஆடை விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளார். சமந்தா அக்கினேனி என்பதன் சுருக்கம்தான் இந்த ‘சாக்கி’. சமந்தாவின் இந்தப் புதிய முயற்சியைப் பலரும் பாராட்டிவரும் நிலையில், நடிகரும், சமந்தாவின் மாமனாருமான நாகர்ஜுனா ட்விட்டரில் சமந்தாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.‘உன்னுடைய புதிய ஆடை விற்பனையகத்துக்கு என்னுடைய வாழ்த்துகள். நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் என எனக்குத் தெரியும்’என தெரிவித்துள்ளார் நாகர்ஜுனா. மாமனாரின் பாராட்டில் நெகிழ்ந்துபோயுள்ள சமந்தா, ‘மிக்க நன்றி மாமா’என தெரிவித்துள்ளார். இதேபோல் சமந்தாவின் புதிய பயணத்துக்கு கணவர் நாக சைதன்யாவும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமந்தாவின் முயற்சிகள் இத்துடன் நின்றுவிடாது என்பது மட்டும் நிச்சயம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்