திரைச்செய்திகள்

சில வேற்று மொழி படங்களைப் பார்க்கும் போது, இந்தப் படம் எப்போது தமிழ் ரீமேக்கில் செய்வார்கள் என்ற ஆர்வம் எழும். ஏனென்றால் அந்தளவுக்கு அந்தப் படத்தின் கதாபாத்திரங்களில் தாக்கம் நம்மை பாதித்திருக்கும். அப்படியொரு படம் தான் 'அந்தாதூன்'.

அனைத்து மொழிகளிலும் ஏற்றவாறு கலகலப்புடன் கூடிய த்ரில்லராக அமைத்திருப்பார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது மட்டுமன்றி சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை என தேசிய விருதுகளையும் வென்றது. இதில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கினை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் தியாகராஜன். ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு பணிகளைத் தொடங்கினார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடலிழைத்து முழுமையாக மாறியுள்ளார் பிரசாந்த். இந்தப் படத்தை 'பொன்மகள் வந்தாள்' படத்தின் மூலம் முத்திரை பதித்த ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். முன்னதாக இந்தப் படம் மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது.

இதன் பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தபு கதாபாத்திரத்துக்கு மிகப்பிரபலமான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்தும் ஒப்பந்தமாக முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள். இந்தப் படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார் தியாகராஜன். டிசம்பர் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, நடிகர்கள் - தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் என அனைத்து பணிகளையும் மும்முரமாக கவனித்து வருகிறார் ஜே.ஜே.பிரட்ரிக்.

இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'அந்தாதூன்' இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கும் அதே போன்றதொரு வரவேற்பைப் பெற வேண்டும் என்று அனைத்து வழிகளிலும் படக்குழு பணியாற்றி வருகிறது. ரசிகர்களுக்கு காமெடியான ஒரு த்ரில்லர் படம் 2021-ம் ஆண்டு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்