திரைச்செய்திகள்

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதை அதிகாரபூர்வமாக படநிறுவனம் உறுதிப்படுத்தியதை கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தோம். ‘

லாபம்’ படம் முடிவடைந்துவிட்டதைத் தொடர்ந்து முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தயாராகிவருகிறார் என்பதையும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

அதேநேரம் படத்திற்கு இன்னும் தலைப்பு சூட்டப்படாத நிலையில் படத்தை தயாரிக்கும் டிஏஆர் மோஷன் பிச்சர்ஸ் நிறுவவனம் இப்படத்திற்கு ‘800’ எனப் பெயர் சூட்ட இருப்பதை முன்னதாகவே தெரிவித்திருந்தோம் அதாவது முத்தையா முரளிதரன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனை குறிப்பிடும் விதமாகவே படத்திற்கு ‘800’ எனப் பெயர் சூட்ட படநிறுவனம் திட்டமிட்டு படத்தலைப்பை பதிவு செய்திருப்பதை முன்னதாகவே தெரிவித்தோம்.

இன்று நாம் குறிப்பிட்ட அதே தலைப்பின் முதல் தோற்றத்தை வெளியிட்டு நமது செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறது பட நிறுவனம். இது நாம் எப்போது நம்பகமான திரைச் செய்திகளைக் கொடுக்கிறோம் என்பதற்கு உதாரணம்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்