திரைச்செய்திகள்

மோகன் ராஜா இயக்கத்தில் அவரது தம்பி ஜெயம் ரவி நாயகனான நடித்து கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற படம் தனி ஒருவன்.

எல்லா திரைப்படங்களிலும் ஹீரோவை மட்டுமே ஆண்மை பொருந்தியவராக, அழகாக, அறிவுள்ளவராக காண்பித்து வந்த தமிழ் சினிமாவில் வில்லனையும் ஹீரோவுக்கு நிகராக அல்ல ஹீரோவைவிட ஒருபடி அதிக புத்திசாலியாக திறமையானவனாக சித்தரித்தது இப்படத்தின் மிகப்பெரிய பலம். தனி ஒருவனின் மிகப்பெரிய வெற்றி அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் தனி ஒருவன் 2 படத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து வருகின்றன. மோகன் ராஜா, ஜெயம் ரவி சகோதரர்கள் கூட்டணியில் உருவாகும் 7-வது படமாக இப்படம் அமையவிருக்கிறது. தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் அதன் தொடர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. எனவே இரண்டாம் பக்கத்தில் அதை விட சக்தி வாய்ந்த ஒரு வில்லன் இருக்கவேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், வில்லனாக மீண்டும் அரவிந்தசாமியா அல்லது வேறு ஆளா என்பதை இயக்குநர் அறிவிக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இதற்கிடையில், ஜெயம் ரவி இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் பூமி படத்தில் நடித்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். தனது படங்கள் எதுவும் நேரடியாக ஓடிடியில் வெளியாகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஜெயம்ரவி.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்