திரைச்செய்திகள்

கமலின் கடைகுட்டிப்பெண் அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ படத்தின் ட்ரைலரை அக்‌ஷராவின் பிறந்தநாளான இன்று கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார்.

முன்னதாக விஜய் சேதுபதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட, நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் டீஸரை வெளியிட்டு அசத்தினார். இப்படம் குறித்தி இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இது குறித்து கூறியதாவது.. “ இந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமையான உலக நாயகன் கமலஹாசன், எங்களின் கோரிக்கையை ஏற்று டிரெய்லரை வெளியிட்டது, எங்கள் மொத்தக்குழுவையும் பெரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் ஒரு சிறப்பாக அக்‌ஷரா ஹாசனின் பிறந்த நாளில் டிரெய்லர் வெளியானது இன்னும் சந்தோஷம் தரும் நிகழ்வாகும். “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படக்குழு கொண்டாட்டத்தில் ஈடுபட மேலும் ஒரு காரணமும் இப்போது சேர்ந்திருக்கிறது. அமெரிக்கவில் நடைபெறும் மதிப்புமிக்க இந்திய திரைப்பட விழாவான Caleidoscope Indian Film Festival Boston க்கு “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு நல்ல விமர்சனங்களை பெற்ற கேடி படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே தமிழ் திரைப்படம் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படம் மட்டும் தான் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் பாஸ்டன் (Boston) நகர திரையரங்குகளில் நவம்பர் 6 முதம் 8 ஆம் தேதி வரை திரையிடப்படுகிறது.

இப்படத்டில் அக்‌ஷரா ஏற்றுள்ள பவித்ரா கதாபாத்திரம் எதை நோக்கி பயணிக்கிறது என்பதை ரசிகர்களை யூகிக்க தூண்டுவதாக இருக்கிறது படத்தின் ட்ரைலர். இதுபற்றி இயக்குநர் கூறும்போது “ பவித்ராவின் உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவது தான் இந்த டிரெய்லர். பவித்ரா உலகம் எத்தகையது, அவளை சுற்றிய உறவுகள், பாத்திரங்கள் ஆகியவற்றை உணரச்செய்வதாக டிரெய்லர் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நவநாகரீக உலகில் அனைத்து பெண்களும் தன்னுள் சிறிதளவேனும் பவித்ராவை உணர்வார்கள். இது “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” முக்கிய சிறப்பம்சமாக, படத்தை பார்க்க முக்கிய காரணியாக இருக்கும். ” என்றார். இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன் நாயகியாக நடிக்க, பிரபல பாடகி உஷா உதூப் அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார். பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார்,சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்