திரைச்செய்திகள்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் - ஸ்ருதிஹாசன் நடித்த ‘3’ திரைப்படத்துக்காக முதன் முதலில் இணைந்தது தனுஷ் - அனிருத் கூட்டணி.

அதில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல், தேசம் மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து பாப்புலர் ஆனது. அதன்பின்னர், உத்தமபுத்திரன், குட்டி, யாரடி நீ மோகினி, விஐபி உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய இருவரும் கடைசியாக தங்க மகன் படத்துக்காக இணைந்தனர். அதன்பின்னர் தற்போது ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இருவரும், தனுஷ் - 44 திரைப்படத்திற்காக ஒன்றிணைய இருக்கிறார்கள்.

இன்று இசையமைப்பாளர் அனிருத்தின் 29-வது பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை, படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த மெகா ஹிட் கூட்டணி மீண்டும் ஒன்றிணைவதால் இருவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்தப் படத்தில் மீண்டும் அவர்கள் இருவரது முத்திரையுமே பதியும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்