திரைச்செய்திகள்

தமிழ் சினிமாவின் குத்தாட்டப் பாடல் போடுவதில் இளைஞர்களிடம் அதிக பாராட்டுக்களைப் பெற்ற பல முன்னணி இசையமைப்பாளர்கள் உள்ளனர்.

அவர்களில் அனிருத்தான் அனைவருக்கும் பாஸ் என்று ஆகிவிட்டது. அவர் இன்று தனது 29-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். குத்தாட்டத்தட்டப் பாடல்போடும் இன்றைய இளைஞர்களின் விருப்பத்திற்கேற்ப பாடல்களைத் தருவதிலும் தன்னை தனித்து தக்கவைத்துள்ளார்.

மீண்டும் இணைந்த தனுஷ் - அனிருத் கூட்டணி!

தற்போது தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அதேநேரம் இவரது இசையில் அடுத்து வெளிவர இருப்பது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம். இந்நிலையில் அனிருத் பிறந்தநாளுக்கு எதிர்பாராத பரிசு கொடுக்க வேண்டும் என மாஸ்டர் படக்குழு தீர்மானித்தது. அதனால் மாஸ்டர் படத்திலிருந்து ‘குயிட் பண்ணுடா’ பாடலின் லிரிக்கல் வீடியோ காணொளியை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கின்றனர். அதற்கு முன்னதாக பிறந்தநாளை முன்னிட்டு காமென் டிபி ஒன்றை மாஸ்டர் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜால் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ‘குயிட் பண்ணுடா’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய ஹேஷ் டேக்குகலை சமூக வலைதளத்தில் விஜய்யின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்