திரைச்செய்திகள்

மிஷ்கின் இயக்கத்தில் அறிமுக நட்சத்திரங்களுடன் ராதா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படம் பிசாசு.

தற்போது அதன் இரண்டாவது பாகமாக ‘பிசாசு 2’ என பெயர் வைக்கப்பட்ட படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். இதில் ஆன்டிரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு நேற்றுமுந்தினம் வெளியானது. முதல் பாகத்துக்கு இசையமைத்திருந்தவர் ஆரோல் கரோலி. அதில் இடம்பெற்ற ‘போகும் பாதை’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அந்தப் பாடலை உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியிருந்தார்.

அனிருத்துக்கு ‘மாஸ்டர்’ படக்குழுவின் பிறந்தநாள் பரிசு!

(அந்தப் பாடலின் மென்சோக இன்பத்தை கீழேயுள்ள இணைப்பில் கேட்டும் பார்க்கலாம்)

தற்போது ’பிசாசு 2’ படத்துக்கு ஆரோல் கரோலிக்கு பதிலாக கார்த்திக் ராஜாவை இசையமைப்பாளராக தேர்வு செய்துள்ளார் மிஷ்கின்.இது குறித்து இயக்குநர் மிஷ்கின் கூறும்போது: “பிசாசு கொண்டாடப்பட முக்கிய காரணிகளில் ஒன்று, அதன் தவிர்க்கமுடியாத இசை ஆகும். பிசாசு 2 கதையை உருவாக்கியபோது உணர்ச்சி ததும்பும் கதையில் இசைக்கான முக்கியதுவம் விட்டுப்போய்விடக்கூடாது என நினைத்தேன்.

‘800’ திரைப்படம் குறித்து முத்தையா முரளிதரன் அறிக்கை

இசையும் உணர்வுகளும் இரண்டறக் கலந்து இக்கதையை கூற முயல்கிறேன். தற்போது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் இப்படத்திற்காக இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது இசை பிரபலமான, பல திரைப்படங்களுக்கு உயிர் தந்திருக்கிறது. அவருடன் இசையமைக்கும் பணியில் ஒவ்வொரு தருணமும் பெரும் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்திருகிறது. இன்னும் நெகிழ்வான, சிறப்பான தருணங்களை, இந்த இசைப்பயணம் இருவருக்கும் தருமென நம்புகிறேன்”எனத் தெரிவித்துள்ளார். பிசாசு 2 -ன் இசையைக் குறித்து சில நெட்டிசன்கள் எதிர்பார்ப்புடன் பதிவிட்டுள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்