திரைச்செய்திகள்

கடந்த ஆண்டு வெளியாகி உலக அளவில் வசூலை வாரிக்குவித்த ஹாலிவுட் சூப்பர் வுமன் படம்‘வொண்டர் வுமன்’ .

அந்தப் படத்தில் அபூர்வ சூப்பர் சக்திகள் கொண்ட இளவரசி டயானாவாக நடித்து உலகம் முழுமவது ரசிகர்களைப் பெற்றவர் இஸ்ரேலிய நடிகையான கால் கடோட். இவர், இயக்குனர் பாட்டி ஜென்கின்ஸ் இயக்கவிருக்கும் கிளியோபாட்ராவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கிளியோபாட்ரா வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஓடிடி தளத்துக்கு வந்தது ‘சர்ச்சைக்குரிய’ திரைப்படம்!

கிறிஸ்துவுக்கு முன்பு பண்டைய எகிப்து நாட்டின் மிக அழகான அரசியாக கருதப்படுபவர் கிளியோபாட்ரா. எகிப்து டோலமிக் ராஜ்ஜியத்தின் கடைசி ஆட்சியாளர் கிளியோபாட்ரா தான். ஜென்கின்ஸ் - கால் கடோட் கூட்டணி ஏற்கனவே ‘வொண்டர் வுமன் ’ வசூல் வெற்றியைப் பெற்றதால் இந்தப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. இதுபற்றி கால் கடோட் ஊடகங்களுக்கு அளித்திருக்கும் பேட்டியில்: “நான் ஜென்கின்ஸ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

காதலியைக் கரம் பற்றுகிறார் அதர்வா!

எகிப்தின் ராணி கிளியோபாட்ராவின் இதற்கு முன் கண்டிராத கதையை திரைக்கு கொண்டி வருகிறோம். கேமராவின் முன்னும் பின்னும் பெண்களின் கண்களால் முதல்முறையாக அவரது கதையைச் சொல்ல வருகிறேன்”என்று தெரிவித்துள்ளார். 67 ஆண்டுகளுக்கு முன் எல். மான்கிவிச் இயக்கத்தில் 1963 -ஆம் ஆண்டு வெளியான ‘கிளியோபாட்ரா’ படத்தில் நடிகை எலிசபெத் டெய்லர் நைல் ராணியாக நடித்திருந்தார். அந்தப் படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்