திரைச்செய்திகள்

காந்தர்வக் குரலோன் கே.ஜே.யேசுதாஸின் மகன், பாடகர் விஜய் ஜேசுதாஸ்.

தமிழ் சினிமாவில் இவர் நிறைய பாடல்களைப் பாடியிருந்தாலும், தனுஷ் நடித்த ‘மாரி’ பத்தில் வில்லன் போலிசாக நடித்ததன் மூலம் நல்ல நடிகர் என்றும் பெயர் பெற்றார். பின்னர் படைவீரன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். தற்போது இரண்டு படங்களில் நடித்துவரும் இவர் தனது பாடகர் அடையாளத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.மலையாளத்தில் 3 முறை சிறந்த பாடகருக்கான மாநில அரசின் விருதும், 5 முறை பிலிம்பேர் விருதுகளும், 2014-ம் ஆண்டு நந்தி விருதும் பெற்றுள்ளார்.

கார்த்திக் ராஜாவைப் புகழும் மிஷ்கின்!

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், "மலையாள சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கும், பின்னணி பாடகர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. எனவே இனி மலையாள சினிமாவில் பாடப் போவதில்லை" என அதிரடியாக விஜய் யேசுதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், "மலையாளத்தில் தான் பலமுறை பலரிடம் அவமானப்பட்டுள்ளேன்.

ஓடிடி தளத்துக்கு வந்தது ‘சர்ச்சைக்குரிய’ திரைப்படம்!

எனவே இனியும் அந்த அவமானங்களைத் தாங்க முடியாது என்பதால் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.இந்த முடிவு மலையாளப் படங்களுக்கு மட்டும் தான் என்றும், தமிழ், தெலுங்கு மொழிகளில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அங்குப் பாடகர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கின்றனர் என்றும் விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

தென்னிந்திய மொழிகள், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானால் அதை ‘பான் இந்தியா பிலிம் என்று அழைக்கிறார்கள். 'கே.ஜி.எஃப்' அப்படியொரு படம்தான்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.