திரைச்செய்திகள்

தளபதி விஜய் நடித்துள் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் நவம்பர் 14 தீபாவளியன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக அறிவிப்பு வந்துள்ளது.

அதேபோல் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீசரும் நாளை இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் டீசரும் தீபாவளியன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் தீபாவளியன்று ரசிகர்களுக்கு மூன்று ட்ரீட் கிடைக்கும் என்றும் விஜய்க்கு போட்டியாகவே இந்த இரண்டு படங்களின் டீசர்களும் வெளியாகின்றன எனவும் ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.

சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் நிஜப் பாம்பை படப்பிடிப்புக்கு பயன்படுத்தியதால் விலங்கு வதை அமைப்பான பீட்டாவிலிருந்து அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட அனைத்து போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகளும் முடிந்து முதல் பிரதி தயாரான நிலையில் நேற்று ‘டாக்டர்’ படக்குழுவுக்காக முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. படம் பார்த்த படக்குழுவினர், சிவகார்த்திகேயனின் நடிப்பு பலமடங்கு மெருகேறி வருவதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.