திரைச்செய்திகள்

‘ஆன்லைன் ரம்மி’ விளையாண்டு லட்சக் கணக்கில் பணத்தை இழந்து தமிழகத்தில் மட்டும் இதுவரை 17 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இதில் ஆன்லைன் ரம்மியால் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று கடந்த 3 மாதங்களில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாய்த்துக்கொண்டவர்கள் மட்டுமே 3 பேர். அப்படிப்பட்ட ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் பிரகாஷ் ராஜ், ராணா ஆகிய மிகப்பெரிய நட்சத்திரங்கள் அதில் நடித்தனர். இது பெரும் சர்ச்சையானது. சூதாட்ட விளம்பரம் என்றில்லை; விஷத்தன்மை கொண்ட குளிர் பானங்கள் உள்ளிட்ட பல தவறான தயாரிப்புகளில் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பது பற்றி இதுவரை கவலைப்பட்டதே இல்லை. அதற்குக் காரணம் ஒரு நாளில் எடுக்கப்பட்டுவிடும் விளம்பரங்களுக்கு அவர்கள் வாங்கும் ஊதியம் கோடிகளில் உள்ளது. இவர்கள் வாங்கும் விளம்பரக் கட்டணம் தயாரிப்பு விலையில் ஏற்றப்படுவதால், நட்சத்திரங்கள் நடிக்கும் பொருட்கள், சேவைகளை பயன்படுத்தும் நுகரும் நாம் தான் அவர்களின் விளம்பரத்துக்கும் காசு கொடுத்துள்ளோம் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது முக்கியம்.

ஒரு படத்துக்கு வாங்கும் ஊதியத்துடன் கணக்கிடும்போது, மாஸ் ஹீரோக்கள் விளம்பரப் படங்களில் நடித்துக்கொடுக்க வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் கூட வரலாம்! விளம்பரங்களில் நடிக்க அதற்கென்றே மாடல்கள் இருக்கும்போது ஏன் பிரபலமான சினிமா நட்சத்திரங்களை நாடுகின்றன நிறுவனங்கள்? மாடல்களை விட சினிமா நட்சத்திரங்கள் நடிக்கும் விளம்பரப் படங்கள் என்றால் அதற்கு பார்வையாளர்களிடம் அமோக வரவேற்பு இருப்பதுதான் காரணம். அதாவது தங்கள் அபிமானத்துக்குரிய நட்சத்திரம் நடித்த விளம்பரத்தை ‘முடிவெடுக்கும் காரணியாக’ ஏற்றுக்கொள்கிறார்கள்! ஆக பிரபலமான நட்சத்திரங்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ள மாஸ் ஹீரோக்கள் ஒருநாளைக்கு வாங்கும் விளம்பரப் பட நடிப்புக்கான ஊதியப்பட்டியலைப் பாருங்கள்... இந்த ஊதியம், பிரபல விளம்பர நிறுவனங்கள் எவ்வளவு ஊதியம் கொடுத்தன என்பதை தெரிந்துகொள்ள ‘தகவல் அறியும் சட்ட’த்தின் மூலம் வருமான வரித்துறையிடமிருந்து ட்ராபிக் ராமசாமியால் பெறப்பட்டவை. இவற்றை வெளியிடவும் முன்னணி ஊடகங்கள் மறுத்துவிட்டன. 4தமிழ் மீடியாவுக்கு இவற்றை வெளியிடுவதில் எந்தத் தயக்கமும் இல்லை.

கோலிவுட்டில் விளம்பர ஊதியம்!

நடிகர்கள்

விஜய் - 5.5 கோடி
கமல் 3.5 கோடி
விஜய்சேதுபதி 2 கோடி
சூர்யா - 1.5 கோடி
விக்ரம் -1 கோடி
கார்த்தி -1 கோடி
சரத்குமார்- 85 லட்சம்
நாசர் -65 லட்சம்
சமுத்திரக்கனி 35 லட்சம்
நிழல்கள் ரவி 17 லட்சம்


நடிகைகள்

காஜல் அகர்வால் 1 கொடியே 90 லட்சம்
சமந்தா 1.கோடியே 20 லட்சம்
நயன்தாரா 1 கோடி
த்ரிஷா -45 லட்சம்
அனுஷ்கா - 60 லட்சம்
சினேகா - பிரசன்னா தம்பதி 30 லட்சம்
லேகா வாஷிங்கடன் 11 லட்சம்

பாலிவுட்

அமீர் கான் – 5 கோடி
ஷாரூக்கான் - 4 கோடி
அக்ஷய் குமார் – 2 கோடி
சல்மான் கான் – 3 கோடி
அஜய் தேவ்கான் - 1.5 கோடி
ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப், கரீனா கபூர் – 1. 5 கோடி
தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா – 2 கோடியே 80

ஒரு நிறுவனத்தின் தயாரிப்புக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள்வரை விளம்பரத் தூதுவராக இருப்பதற்கு பேக்கேஜாக வாங்கும் சம்பளம்தான் இவை. இலவசங்கள் இந்தக் கணக்கில் வராது! இந்தியாவில் விளம்பர சந்தை ஆண்டுக்கு இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் விற்பனை வருமாணம் ஈட்டுகிறதாம்! இதில் நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்படும் கோடிகள் கொசு என்றால், மற்ற அனைத்து செலவினங்களும், தயாரிப்பு பொருளின் விலையில் வைக்கப்பட்டு, நுகர்வோராகிய ரசிகர்களின் தலையில்தான் இத்தனை ஆயிரம் கோடிகளை கட்டுகின்றன தயாரிப்பு நிறுவனக்கள். தொலைக்காட்சிகளில் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடம் மட்டுமே விளம்பரம் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதாகச் சொன்னவர்கள் ஆளும் அரசியல்வாதிகள். ஆனால், அவர்களே தொலைக்காட்சியும் நடத்துவதால் அதை அமல்படுத்தவில்லை.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.