திரைச்செய்திகள்

சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் சுதா கொங்கரா எழுத்து, இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்று படக்குழுவினர் ‘அன் அஃப்பீஸியலாக’ விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால் இது அவருடைய பயோபிக் அல்ல என்பதை 'சூரரைப் போற்று' படம் பார்த்துவிட்டு ஜி.ஆர்.கோபிநாத்தே தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருக்கிறார். இதுபற்றிய அவரது பதிவில்:

"சூரரைப் போற்று... நிறையக் கற்பனை இருந்தாலும், என்னுடைய புத்தகத்தின் மையக் கருவை அற்புதமாகப் படம்பிடித்துள்ளது. உண்மையான ரோலர் கோஸ்டர் அனுபவம். ஆம், நேற்றிரவு பார்த்தேன். நினைவுகளைத் தூண்டிய பல குடும்பக் காட்சிகளில் சிரிப்பையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாடகத்தன்மை இருந்தாலும், பெரும் முரண்பாடுகளுடன் கூடிய பின்தங்கிய கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கைக்கு உண்மை சேர்க்கிறது.

என் மனைவி பார்கவியாகச் சித்தரிக்கப்பட்டுள்ள அபர்ணா சரியான தேர்வு. தனக்கென்று கனவுகளுடன் கூடிய, வலிமையான அதே நேரம் மென்மையான, ஆர்வம் நிறைந்த அச்சமில்லாத ஒரு பெண்ணான அவர் கிராமப்புறப் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார். கனவுகளை நனவாக்கும் பைத்தியக்காரத்தனத்தை மனதில் கொண்டிருக்கும் ஒரு தொழில்முனைவோர் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா தனது சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற இருண்ட காலங்களில் உத்வேகம் அளிக்கக் கூடிய திரைப்படம்." என்று ஜி.ஆர்.கோபிநாத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.