திரைச்செய்திகள்

கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருபவர்,கார்த்தி. தற்போது இயக்குநர் பி.எஸ். மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார்.

வித்தியாசமான கதை அமைப்பில் உருவான 'இரும்புத்திரை', 'ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கியவர்தான் மித்ரன். அவருடன் கார்த்தி இணைந்திருப்பது அவரது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் ‘புரொடக்‌ஷன் 4’ நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்க, இன்று தீபாவளி நன்னாளில் பூஜையுடன் பாடல் பதிவு ஆரம்பமானது.பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு கூறியிருக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.