இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘தரமணி’ படத்தின் மூலம் அறிமுகமானார் வஸந்த் ரவி.
தற்போது தனது இரண்டாவது படமாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலருடன் வசந்த் ரவி, டானாக நடித்துள்ள படம் 'ராக்கி'. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்று வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில், 'ராக்கி' படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பால் அருண் மாதேஸ்வரனுக்கு அடுத்த படத்துக்கான வாய்ப்பு கிடைத்தது. நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் இயக்குநர் செல்வராகவன். அவர் நடிகராக அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
'சாணிக் காயிதம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவருமே வித்தியாசமான லுக்கில் இருப்பதைப் பலரும் வரவேற்றுள்ளனர்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்