திரைச்செய்திகள்

தற்போது பிக்பாஸ் சீஸன் 4 ஒளிபரப்பாகி வருகிறது.

இதற்கு முன்னர் கவனம் பெற்ற பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமடைந்தவர் கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லோஸ்லியா. பிக் பாஸ் புகழுக்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றார். இவர் தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ஃப்ரண்ட்ஷிப் என்னும் தமிழ் படம் உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்காக தனது தாயுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

ஆனால், இவரது தந்தை மரியநேசன் கனடாவில் பணிபுரிந்து வந்தார். திடிரென லோஸ்லியாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மரணமடைந்துள்ளார். இதனை கேள்வியுற்ற அனைவரும் லோஸ்லியாவுக்கு சமூக வலைதளத்தில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிக் பாஸில் லோஸ்லியாவின் சக போட்டியாளராக பங்கேற்ற இயக்குனர் சேரன் இதுகுறித்து அறிந்ததும் “லோஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித்தாங்குவாய் மகளே... சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

தென்னிந்திய மொழிகள், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானால் அதை ‘பான் இந்தியா பிலிம் என்று அழைக்கிறார்கள். 'கே.ஜி.எஃப்' அப்படியொரு படம்தான்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.